மாடு பிடி வீரருக்கு கார் பரிசா? விமர்சிக்கும் இயக்குனர் தங்கர் பச்சான். ஏன் பாருங்க.

0
243
thangarbachan
- Advertisement -

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று அனைத்தும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாட்டு பொங்கல் அன்று கிராமங்களில் தமிழ் நாட்டு கலாச்சார நிகழ்வுகளும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடந்தது. தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதாலும், மூன்றாம் அலையின் பரவல் அதிகரித்து வருவதாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

-விளம்பரம்-
அவனியாபுரம் ஜல்லிகட்டு: 24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச்  சென்றார் மாடுபிடி வீரர் கார்த்திக்

அதுமட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், காளைகளின் உரிமையாளர்கள் என அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருந்தார்கள். இப்படி அரசு விதித்த பல கட்டுப்பாடுகளின் படி தான் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. மேலும், தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகளை அடக்கும் வீரர்களுக்கு தமிழக முதல்வர் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

- Advertisement -

ஜல்லிக்கட்டு வீரருக்கு கொடுக்கும் பரிசுகள்:

இந்த ஆண்டு அரசு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றிருந்தது. அதில் மாடு அடக்கும் வீரர்களுக்கும், பிடிகொடுக்காத காளையின் உரிமையாளர்களுக்கும் கார்கள், பைக்குகள், தங்க மோதிரங்கள் என பரிசாக வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறாக பரிசுகள் வழங்கப்பட்டது குறித்து இயக்குனர் தங்கர்பச்சன் விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, சென்ற ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசாக அளித்திருந்தார்.

அவனியாபுரம் ஜல்லிகட்டு: 24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச்  சென்றார் மாடுபிடி வீரர் கார்த்திக்

வெற்றி பெற்ற வீரருக்கு முதலமைச்சர் கொடுத்த பரிசு:

இதே கோரிக்கையை நான் முதலமைச்சர் இடம் அளித்து இருந்தேன். அதே போல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் கார் வழங்குவதாக கூறி இருந்தார் வீரர்கள். உயிரை பணயம் வைத்து பங்குபெறும் போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். இப்போட்டியில் வென்றவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்போதாவது அரசு சிந்திக்க வேண்டும்.

-விளம்பரம்-

இதற்க்கு தங்கர்பச்சன் அறிக்கை:

ஏற்கனவே இதுபோல் காரை பரிசாக பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது வாழ்ந்து அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலங்கள் என ஏதாவது ஒன்று கொடுத்து அவருடைய வாழ்க்கைக்கு முன்னேற்றம் ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்.

வென்ற வீரர்களின் நிலைமை:

பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் விற்கும் வரையில் அதற்கு செலவழிப்பதற்கு அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது. முதலமைச்சர் இதை எண்ணிப்பார்க்க வேண்டும். தயவு செய்து இந்த கோரிக்கையை முதலமைச்சர் சிந்தித்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தங்கர்பச்சன் கூறியிருந்தார். அவர் வெளியிட்ட அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement