திடிர்யென்று வைரலாகும் சிவகார்த்திகேயன் புகைப்படம்..! குழப்பதில் ரசிகர்கள் .! இதுதான் காரணமா..?

0
246

சமூக வலைதளங்களில், சிவகார்த்திகேயன் பள்ளி மாணவர்களுக்கு முன் நின்றுகொண்டு பேசுவது போன்ற புகைப்படம், அதிக அளவில் பரப்பப்பட்டுவருகிறது. இந்தப் புகைப்படம் குறித்து இயக்குநர் திரு, விளக்களித்திருக்கிறார்.

siva

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் `சீமராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்த மாதம் 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதையடுத்து, இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்திலும், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்திலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதுமட்டுமின்றி, திரைத்துறையில் நடிகராக வலம்வந்த சிவகார்த்திகேயன், `கனா’ என்ற திரைப்படத்தின்மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். பல்வேறு புதிய பரிமாணங்களை நோக்கி படையெடுக்கும் சிவகார்த்திகேயனின் புகைப்படம் ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

பள்ளி மாணவர்கள் முன் சிவகார்த்திகேயனும், அவருக்கு அருகில் ‘சமர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் திரு நின்றுகொண்டிருப்பதுபோல அந்தப் புகைப்படம் உள்ளது. இந்நிலையில், புகைப்படம் குறித்து இயக்குநர் திரு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், `சிவகார்த்திகேயனுடன் நான் இருக்கும் புகைப்படம்குறித்து கேட்பவர்களுக்கு, நாங்கள் இருவரும் இணைந்து ஆவணப்படம் ஒன்றை இயக்க உள்ளோம். நல்ல நோக்கத்திற்காக இந்தப் படம் அமையும். மற்ற தகவல்கள் விரைவில். நன்றி!’ என்று அவர் பதிவிட்டுள்ளார். பள்ளி மாணவர்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆவணப்படம் தயாராகிவருவதாகக் கூறப்படுகிறது.