தெலுங்கு, மலையாளம் சினிமா போல தமிழ் சினிமா இல்லை – இயக்குனர் வசந்த பாலனின் உருக்கமான பதிவு

0
111
- Advertisement -

தமிழ் சினிமாவின் நிலை பற்றி இயக்குனர் வசந்த் பாலன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வசந்தபாலன். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன், காதலன், இந்தியன் போன்ற படங்களில் ஷங்கருக்கு உதவி இயக்குனராக இருந்தார் வசந்தபாலன். அதன் பின் இவர் 2003 ஆம் ஆண்டு ஆல்பம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. பின் இவர் வெயில் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் மூலம் வசந்த்பாலன் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த படத்திற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்திருந்தது.

-விளம்பரம்-


- Advertisement -

இதனை தொடர்ந்து இவர் அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில், அநீதி போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படி இவர் கிட்டத்தட்ட தமிழ் திரை உலகில் நுழைந்து 22 வருடங்கள் கடந்து இருக்கிறது. இருந்தாலும் இவர் வெறும் ஏழு படங்களை மட்டும் தான் இயக்கி இருக்கிறார். சமீபத்தில் இவர் தலைமைச் செயலகம் என்ற வெப் தொடரை இயக்கி வெளியிட்டு இருந்தார். இந்த வெப் தொடர் நேரடியாக z5 தளத்தில் வெளியாகியிருந்தது. இதில் கிஷோர், ஸ்ரீயா ரெட்டி, பரத், ரம்யா நம்பிசன் உட்பட பல பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

வசந்த பாலன் திரைப்பயணம்:

இது மொத்தம் எட்டு எபிசோடுகளை கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் களத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருந்தார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் வசந்த் பாலன் அவர்கள் முகநூலில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நேற்று பிரபல திரைத்துறை நண்பர்களுடன் நீண்டநேரமாக தமிழ்ச்சினிமா குறித்து உரையாடிக்கொண்டிருந்தேன். இடைவிடாது தொடர்ந்து வரும் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்கள் மீது மக்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்பட்டு விட்டதாக விவாதம் துவங்கியது.

-விளம்பரம்-

வசந்த் பாலன் பதிவு:

அதற்கு பல படங்களை உதாரணமாகக் காட்டத் துவங்கினார்கள்.வன்முறை அதீதம் குடும்பங்கள் சென்று படம் பார்க்க முடியாதபடி மாறி விட்டதைப் பற்றியும் பேச்சு வளர்ந்தது. இன்னொரு திரை ஆய்வாளர் திரைப்படங்களில் போதனைகளும் அரசியலும் அதிகமாக பேசப்படத் துவங்கியக் காரணத்தினால் பொழுதுபோக்கு அம்சங்கள் மிக மிக குறைந்துவிட்டன என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். அதனால் தான் 12 வருடங்கள் கடந்து வெளிவந்த மத கஜ ராஜா திரைப்படமும், கலகலப்பான குடும்பஸ்தன் திரைப்படமும் திரையரங்கில் பெரும் வெற்றி அடைகின்றன என்பதையும் குறிப்பிட்டார்.

ஒருவிதத்தில் உண்மையை ஒத்து கொள்ளத்தானே வேண்டும். சினிமா ரொம்பவும் ஜனநாயகமாகி விட்டதே பெரும் ஆபத்தாகத் தமிழ்ச்சினிமாவைச் சூழ்ந்திருக்கிறதோ என்று சினிமா ஆய்வாளர் ஒருவர் கூறினார்.சினிமாவிற்கான அடிப்படைப்பயிற்சிகள் எதுவுமின்றி யார் வேண்டுமானாலும் திரைத் தயாரிப்புக்குள்ளே குதிக்கலாம் இயக்கலாம் என்பது அதிகமானது தான் இந்த தோல்விகள் அதிகமானதிற்கும் ஒரு காரணம் என்றார்.minimum professionalism ஒரு திரைப்பட உருவாக்கத்திற்கு அத்தியாவசியத் தேவை என்பதை வலியுறுத்தினார்.

தமிழ் சினிமா பற்றி சொன்னது:

வருடத்திற்கு 250 திரைப்படங்கள் தயாராகிற தமிழ் சினிமாவில் வருடத்திற்கு மக்கள் விரும்புகிற ரசித்து கொண்டாடுகிற இரண்டு மூன்று பொழுதுபோக்குத் திரைப்படங்கள் வந்தாலே மிகப்பெரிய விஷயம் என்று நிலமை ஆகிவிடுகிறது. அதையும் தாண்டி தமிழ் சினிமா தனி மரமாக இருக்கிறது தோப்பாக இல்லை என்பதையும் தெரிவித்தார் நடிகர் பகத் பாசில் ஒரு பேட்டியில் அடுத்த 10 ஆண்டுகளில் மலையாள சினிமா எல்லா ஜானர் வகைப் படங்களையும் வெற்றிகரமாகத் தயாரிக்கிற இந்திய சினிமாவின் முகமாக மாறும் அதற்கு அத்தனை பெரிய நடிகர்களும் இயக்குநர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் துணை நிற்போம் என்பதை மிக மகிழ்ச்சியாக பெருமையாக நம்பிக்கையுடன் ஒரு பேட்டியில் தெரிவிக்கிறார் என்று விவாதத்தில் திரை எழுத்தாளர் ஒருவர் கூறினார்.

மலையாளம்-தெலுங்கு சினிமா:

மலையாள திரையுலகமும் தெலுங்கு திரையுலகமும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
இங்கே தமிழ்சினிமா ஒரு குடையின் கீழ் இல்லாமல் இருப்பதாகத் தோற்றமளிக்கிறது.
நடிகர்கள் தனித்தனி மரமாகவும் தயாரிப்பாளர்கள் தனி மரமாகவும் இயக்குநர்கள் தனி மரமாகவும் இருக்கிறார்கள். தனி மரங்கள் தோப்பாக மாற வேண்டிய நேரம் வந்தே விட்டது.அனைவரும் கைகோர்த்து நிற்க வேண்டிய காலம் எப்போதோ வந்து விட்டது.காலம் தாழ்த்தாமல் கை கோர்ப்போம்.
இந்த பதிவைப் படிக்கும் நண்பர்கள் நீ பொழுதுபோக்கு சினிமா எடுடா என்ற கேள்வியை என் மீது வைத்தால் சரி தான் இந்த கேள்வி எனக்கும் சேர்த்து தான் என்பதை எண்ணியே இதைப் பதிவிடுகிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement