சரவணன் என்ற பெயர் சூர்யாவாக எப்படி மாறியது…?

0
1630
- Advertisement -

நேருக்கு நேர்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சூர்யா. இவர் நடிக்க வந்த தொடக்கத்தில் சரியாக நடிக்க தெரியவில்லை, டான்ஸ் ஆட தெரியவில்லை என்ற விமர்சனகளை சந்தித்தார். இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக நிற்கிறார் சூர்யா.
 Director Vasanthகே.பாலசந்தர் சாரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவன் நான். அதனால், கே.பி சார் படத்தில் நடித்த சிவகுமார் சாரை எனக்கு நன்றாகத் தெரியும். சூர்யாவை சின்ன வயதிலிருந்து சிவகுமார் சார் வீட்டில் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு தோன்றியது ‘ஆசை’ படத்தில் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என்று. அந்த நேரத்தில் ஆசை படத்துக்காகப் புதுமுக நாயகன் நடித்தால் நன்றாகயிருக்கும் என்று தேடிக்கொண்டிருந்தேன். அதனால் சிவகுமார் சாரிடம் கேட்டேன். என் பையன் சரவணனிடம் கேளுங்கள் என்று என்னையும் சூர்யாவையும் ஒரு ரூமில் விட்டுவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார். நான் என் இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். சூர்யா அவரது இருக்கையின் நுனியில் பயந்துகொண்டே உட்கார்ந்தார். நான் கேட்டேன்,’ என் படத்தில் நடிக்க முடியுமா’ என்று. அவர் மெதுவான குரலில் ’சார் நடிக்க பயமா இருக்கு சார். என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட், ஷூட்டிங்கூட பார்த்ததில்லை. அதனால் வேண்டாம் சார்’ என்றார்.

-விளம்பரம்-

ஒருவருக்கு விருப்பம் இல்லை என்றால் அவர்களைக் கட்டாயப்படுத்தி நான் ஒரு காரியம் செய்யச் சொல்ல மாட்டேன். அதுமட்டுமல்லாமல் நடிப்பதற்கு சூர்யா விருப்பமும் காட்டவில்லை. அதனால், சரி வேண்டாமென்று, புதிய ஹீரோவைத் தேட ஆரம்பித்துவிட்டேன். அப்போதுதான் அஜித் ‘ஆசை’ படத்துக்காகக் கிடைத்தார். படமும் ஹிட்” என்றவர் மீண்டும் தொடர்ந்தார்.

- Advertisement -

‘ஆசை’ படத்துக்குப் பிறகு, ‘நேருக்கு நேர்’ திரைப்படத்துக்காக விஜய்யுடன் நடிக்க ஒரு பையன் தேவைப்பட்டான். அப்போதும் சிவகுமார் சார்கிட்ட கேட்டேன். ஆசை 2 மாதிரி எல்லாம் திரும்பவும் நடந்தது. அதே அறை நானும் சூர்யாவும் பேசுறோம். சிவகுமார் சார் வெளியே போய்விட்டார். அப்போது பார்க்கும் சூர்யாவுக்கு நிறைய வித்தியாசங்கள் இருந்தது. கொஞ்சம் முதிர்ச்சியடைந்திருந்தார். என்னைப் பார்த்து கைகொடுத்தார். ’ ‘ஆசை’ படம் பார்த்தேன் சார் நன்றாகயிருந்தது’ என்றார். இருக்கையில் முழுவதுமாக அமர்ந்தார். தைரியமாகப் பேசினார். ’கண்டிப்பாகப் பண்ணலாம் சார். எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம்’ என்றார்.
Surya-Vijay அதன்பிறகு சூர்யாவை ஒரு மாத காலம் ஒரு ப்ராக்டிஸ்காகச் சண்டை பயிற்சியாளர், டான்ஸ் மாஸ்டரிடம் பயிற்சி எடுக்கவைப்பது, மற்றும் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று பார்க்க வைப்பது, டப்பிங் ஸ்டியோவில் வாய்ஸ் கொடுப்பது இதையெல்லாம் செய்ய வைத்தேன். அதுமட்டுமல்லாமல் ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தின் தயாரிப்பு மணிரத்னம் சாரின் மெட்ராஸ் டாக்கீஸ் தான். அதனால் அவர் ஆஃபிஸில் கே.வி.ஆனந்த் சாரை வைத்து ஸ்டில்ஸ் எல்லாம் எடுத்துப் பார்த்தேன். கே.வி.ஆனந்த் சார்தான் படத்துக்கு ஒளிப்பதிவு. கெட்டப் டெஸ்ட் எல்லாம் எடுத்தேன். மணிரத்னம் சார், நான் எல்லோரும் அதைப் பார்த்தோம். எங்கள் அனைவருக்கும் அவரை ரொம்பப் பிடித்திருந்தது.

சிவகுமார் என்னிடம் அப்போது கேட்டார். ஏன், என் பையனை நடிக்க கூப்பிடுறேனு. அப்போது நான் சொன்னேன், ’சார் நீங்கள் வரைந்ததிலேயே பெஸ்ட் ஓவியம் இதுதான் சார்’னு. சூர்யா கண்ணில் பெரிய ஈர்ப்பு இருந்தது. கண்டிப்பாக அவரைப் பெண்களுக்குப் பிடிக்கும் என்று நினைத்தேன். ரொம்ப நைஸ் பெர்ஷன் சூர்யா. இப்போது அவர் திரையுலகத்துக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது என்று ஹாஸ்டேக் பார்க்கும்போது சந்தோஷமாகயிருக்கு.

-விளம்பரம்-

ஏனென்றால், அவர் பெயர் சரவணன்தான். அவரை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக நானும் மணிரத்னம் சாரும் சேர்ந்துதான் பெயர் வைத்தோம். சிவகுமார் சாருடன் எல்லாம் டிஸ்கஷன் பண்ணிதான் இந்தப் பெயர் வைத்தோம். படத்தின் ரிலீஸூக்கு முன்னாடி பிரஸ்ஸில் அவரை அறிமுகப்படுத்துவதற்காகப் பெயர் வைத்து அறிமுகப்படுத்தினோம்.
Surya அவருடைய முதல் ஷாட்டே பைக்கில் வேகமாக வந்து இறங்கி, விஜய்யுடன் சண்டை போடுற மாதிரிதான் இருந்தது. மறக்க முடியாத சீன்ஸ். ரொம்ப சந்தோஷமாகயிருக்கு. நான் அறிமுகப்படுத்தியவர் தற்போது பெரிய ஹீரோவாக இருப்பது. அதைவிடப் பெரிய சந்தோஷம், ஈன்றபோது ஒரு தாய் அடையும் மகிழ்ச்சியைவிட, சான்றோர் எனப் பிறர் சொல்ல கேட்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். அகரம் பவுண்டேஷன் மூலம் தற்போது எல்லோருக்கும் அவர் உதவி செய்வது பார்க்கும்போது மகிழ்ச்சியாகயுள்ளது” என்றார் வசந்த்.

Advertisement