60 வயதில் 35 வயது நடிகையை மணந்த சர்ச்சை இயக்குனர் வேலு பிரபாகரன். அதற்க்கு அவர் சொன்ன காரணத்தை தெரியுமா ?

0
65008
velu
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வேலுபிரபாகரன் திகழ்ந்து வருகிறார். இவர் நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன், சிவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் வேலு பிரபாகரன் கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னைவிட வயதில் மிகவும் குறைவான நடிகையை திருமணம் செய்துள்ள சம்பவம் சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவருக்கு வயது 60, அவர் திருமணம் செய்த நடிகைக்கு 35 வயது தான்.

-விளம்பரம்-

2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஒரு இயக்குனரின் காதல் கதை. இந்த படத்தில் நடித்தவர் தான் ஷெர்லி. மேலும், இந்த படத்தில் இருந்து இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின் இவர்களுடைய பழக்கம் திருமணத்தில் முடிந்தது. இந்நிலையில் இவர்களுடைய திருமணம் குறித்து வேலு பிரபாகரன் அவர்கள் கூறியிருப்பது, நம்முடைய நாட்டில் என் வயதுக்கு இணையாக இருக்கிற யாரும் என்னை திருமணம் செய்ய மாட்டார்கள்.

இதையும் பாருங்க : விவாகரத்து விவகாரம், மன உளைச்சல் – மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்த சமந்தா. என்ன காரணம் பாருங்க.

- Advertisement -

அதனால் இந்த வயதில் நான் ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்று பல பேருக்கு இந்த கேள்வி எழும். டொனால்ட் டிரம்ப் தன்னுடைய 74வது வயதில் திருமணம் செய்தார். அவர் மனைவி மிக இளமையானவர். பொதுவாகவே வாழ்க்கையில் அனைத்து மனிதருக்கும் ஆதரவும், துணையும் தேவை. ஷெர்லி போன்ற சிறந்த துணை கிடைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். அதோடு நான் ரொம்ப அதிஷ்டசாலி. ஷெர்லி என்னை நன்கு புரிந்து வைத்துள்ளார்.

இந்த வயதில் ஷெர்லி எனக்கு கிடைத்தது இயற்கையே எனக்களித்த பரிசு என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஷெர்லி கூறியது, வேலு நேர்மையான, உண்மையான மனிதன். அவரை நான் நன்கு புரிந்து வைத்துள்ளேன். எங்கள் இருவருடைய கருத்தும் ஒத்துப்போவதனால் தான் நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம் என்றார்.

-விளம்பரம்-
Advertisement