இளைய மகன் குக்குவின் பிறந்தநாள், மூத்த மகள் ஷிவானி எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு.

0
4480
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து நடிகர்களாக மாறியவர்கள் பலர் உள்ளார்கள். அதே போல பல்வேறு நடிகர்கள் இயக்குனராகவும் மாறி இருக்கிறார்கள் அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபுவும் ஒருவர். இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இவர் ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த இவர் “சென்னை 28” மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் அனைத்தும் ஹிட் தான்.

-விளம்பரம்-

அதிலும் அஜித்தை வைத்து இவர் எடுத்த மங்காத்தா படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு கடந்த 2011 ஆம் ஆண்டு நடன ஆசிரியை சரசா என்பவற்றின் வளர்ப்பு மகளான ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஷிவானி என்ற மகளும் பிறந்தார்.

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகள் ஷிவானி தனது 18 வது பிறந்தநாளை கொண்டாடினர். தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மூத்த மகள் ஷிவானி

இப்படி ஒரு நிலையில் இவரது இரண்டாம் மகளான குக்கு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்டு வெங்கட் பிரபு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். வெங்கட் பிரபு மகளுக்கு நடிகர்களும் குக்குவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலரோ வெங்கட் பிரபுவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று ஆச்சர்யபட்டும் வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement