தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்ந்து வருகிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக வெற்றிமாறன் இருந்தார். அதற்கு பின் தான் வெற்றி மாறன் இயக்குனராக சினிமா உலகில் களம் இறங்கினார். இவர் முதன் முதலாக பொல்லாதவன் என்ற படத்தை தான் இயக்கினார். அதன் பிறகு பெரும்பாலும் வெற்றிமாறன்– தனுஷ் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் எல்லாமே தாறுமாறு. மேலும், இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.
இறுதியாக தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு தான் டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷும், வெற்றிமாறனும் அசுரன் படத்திற்காக தேசிய விருது வாங்கி இருந்தார்கள். இது குறித்து விருது அனைவரும் பாராட்டி இருந்தார்கள். மேலும், இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பாக வெற்றி மாறன் கதிர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் வைரஸ் என்ற படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்து இருந்தார்.
வெற்றிமாறனின் விடுதலை படம்:
அதே போல வெற்றிமாறன் தான் இயக்கிய முதல் படமான பொல்லாதவன் படத்தில் டப்பிங்கும் பேசி இருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெற்றிமாறன் அவர்கள் நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்டு வருவதால் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ் முன்னணி நட்சத்திரங்களுடன் வெற்றிமாறன் கூட்டணி:
இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படம் முடிந்த பின்னர் வெற்றிமாறன் அவர்கள் நடிகர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்ற பிரமாண்ட படத்தை இயக்க உள்ளார். கலைப்புலி தாணு இந்த படத்திற்கு தயாரிப்பாளராக உள்ளார். ஜல்லிக்கட்டு கதைகளைக் கொண்ட படமாக வாடிவாசல் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கான டைட்டில் வெளியாகியிருந்தது. இது தவிர வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் வெற்றி பெற்ற வட சென்னை படத்தின் இரண்டாவது பாகத்தையும் வெற்றிமாறன் எடுக்க உள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது.
வெற்றிமாறன் இயக்கும் படங்கள்:
அதுமட்டுமில்லாமல் இவர் விஜயை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி வெற்றிமாறன் அவர்கள் விஜய், கமல், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் பெரிய நடிகர்களின் படங்களை இயக்க இருக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இவர் IIFC – இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிலிம் அண்ட் கல்ச்சர் என்ற சினிமா பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
வெற்றிமாறன் வாங்கிய புது பைக் புகைப்படம்:
இந்நிலையில் வெற்றிமாறன் புது பைக் ஒன்றை வாங்கியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிஸியான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் அவர்கள் தற்போது BMW R Nine T Scrambler என்ற பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் CC மட்டும் 1170CC , மேலும் இந்த பைக் சுமார் 19 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வெற்றிமாறன் நண்பர்கள் பைக்கில் தான் பயணம் செய்தார். அவருக்கு முதல் பைக்கை வாங்கி கொடுத்தது அவரது மனைவி தான். வெற்றிமாறன் முதன் முதலில் பயன்படுத்தியது அவர் மனைவி வாங்கி கொடுத்த Rx100 பைக் தான்