விஜய், கமல் என அடுத்தடுத்து 5 மாஸ் ஹீரோ படங்களை கைப்பற்றிய வெற்றிமாறன். மற்ற 3 பேர் யார் பாருங்க.

0
483
vetri
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்ந்து வருகிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். அதற்கு பின் தான் வெற்றி மாறன் இயக்குனராக களம் இறங்கினார். பெரும்பாலும் வெற்றிமாறன்– தனுஷ் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் எல்லாமே தாறுமாறு என்று சொல்லலாம். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது. மேலும், இவர் இயக்கிய ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதை வாங்கி இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்திற்கு இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்தது.

-விளம்பரம்-
OFFICIAL: Vaadivasal First Look | Suriya Birthday, Vetrimaaran, Jallikattu  | Latest Tamil News - YouTube

சில தினங்களுக்கு முன்பு தான் டெல்லியில் தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷும், வெற்றிமாறனும் அசுரன் படத்திற்காக தேசிய விருது வாங்கி இருந்தார்கள். இது குறித்து ரசிகர்கள் அனைவரும் பாராட்டி இருந்தார்கள். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் மீண்டும் ஒரு சந்தோஷமான செய்தியை ரசிகர்களுக்காக அறிவித்துள்ளார். அது என்னவென்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்தடுத்து உருவாக இருக்கும் படங்களின் அறிவிப்புகள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தற்போது வெற்றிமாறன் அவர்கள் நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்டு வருவதால் கொஞ்சம் தாமதமாகிறது.

- Advertisement -

மேலும், இந்த படம் முடிந்த பின்னர் வெற்றிமாறன் அவர்கள் நடிகர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்ற பிரமாண்ட படத்தை இயக்க உள்ளார். விடுதலை படத்தை முடித்துவிட்டு கூடிய விரைவில் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெற்றிமாறன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து கூறியிருப்பது, தளபதி விஜய்யை வைத்து படம் பண்ண இருக்கிறேன். இதுகுறித்து விஜயை சந்தித்து பேசியபோது அவர் உங்களுடைய மற்ற படங்களை முடித்துவிட்டு வாருங்கள் என்று கூறியிருந்தார். விஜயுடன் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது நினைத்து ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

Viduthalai First Look Teaser | Vetrimaaran | Soori, Vijay Sethupathi |  Tamil Movie 2021 | Viduthalai - YouTube

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடிகர் கமலஹாசனை சந்தித்து பேசியிருந்தேன். அவரும் நான் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு உறுதியளித்திருந்தார் என்று கூறி இருந்தார். இதுதவிர வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் வெற்றி பெற்ற வட சென்னை படத்தின் இரண்டாவது பாகத்தையும் வெற்றிமாறன் எடுக்க உள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய், கமல், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் பெரிய நடிகர்களின் படங்களை இயக்க உள்ளதாக வெற்றிமாறன் அறிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படங்கள் கண்டிப்பாக பல விருதுகளை தட்டிச் செல்லும் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தும், வாழ்த்துகளை கூறியும் வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement