மலையாள படங்களுக்கு கொடுக்கும் ஆதரவை தமிழ் படங்களுக்கும் கொடுங்கள் என்று இயக்குனர் விக்னேஷ் கார்த்தி வேதனையுடன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் கார்த்திக். இவர் நடிகர், ரேடியோ ஜாக்கி, இயக்குனர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். இவர் ரேடியோ விஜேவாக தான் தன்னுடைய கேரியைத் தொடங்கினார். இவர் 2019ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

அதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் தொகுப்பாளரானார். அதன் பின் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதனை தொடர்ந்து இவர் 2016 ஆம் ஆண்டு நட்பதிகாரம் 79 என்ற படத்தில் குணச்சித்திர நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதனை பின் இவர் சோலா பூரி, குற்றம் நடந்தது என்ன போன்ற பல படங்களில் நடித்திருந்தார். பின் ஏண்டா தலையில எண்ண வைக்கல என்ற படத்தின் மூலம் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார். இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படம் வித்தியாசமான கதைக்களமாக இருந்ததால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றி பெறவில்லை.

Advertisement

விக்னேஷ் கார்த்தி திரைப்பயணம்:

இதை தொடர்ந்து இவர் திட்டம் இரண்டு படத்தை இயக்கியிருந்தார். அந்த படமும் பெரிய அளவில் பேசப்படவில்லை. கடந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியிருந்த அடியே என்ற படத்தை விக்னேஷ் கார்த்தி தான் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கௌரி கிஷன், வெங்கட் பிரபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.
தற்போது அம்மு அபிராமி நடிப்பில் வெளியாகியிருக்கும் ஹாட்ஸ்பாட் படத்தை விக்னேஷ் கார்த்தி இயக்கி இருக்கிறார்.

ஹாட்ஸ்பாட் படம்:

இந்த படத்தில் கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், கௌரி கிஷன், ஆதித்ய பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படம் கடந்த மார்ச் 29ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. நான்கு கதை அம்சங்களைக் கொண்டு இந்த படத்தை இயக்குனர் சுவாரசியமாக கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனம் பெற்றாலும், எதிர்பார்த்த அளவிற்க்கு வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

விக்னேஷ் கார்த்தி பேட்டி:

இந்நிலையில் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க படக்குழு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார்கள். அதில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், இப்போதெல்லாம் பெரிய ஸ்டார்களுடைய படங்களை தவிர சின்ன படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் நாளே படம் பார்க்க யாரும் வருவதில்லை. ஒரு வாரத்திற்கு அத்தனை படங்கள் வெளியாகின்றது. ஆனால், கூட்டம் தான் வரவில்லை. அந்த படங்கள் இரண்டு நாட்கள் கூட திரையரங்குகளில் ஓடுவதில்லை.

Advertisement

தமிழ் சினிமா குறித்து சொன்னது:

இந்த சூழ்நிலையில் தான் படத்தின் மீது கவனத்தை ஏற்படுத்த வேணும் என்று தான் படத்தினுடைய ட்ரெய்லரை நாங்கள் அப்படி வெளியிட்டோம். ஆனால், உண்மையில் ஒரு நல்ல கருத்தை சுவாரசியமாக இந்த படத்தில் சொல்ல இருக்கிறோம். படம் பார்த்த எல்லோருமே பாஸிட்டிவானா விமர்சனங்கள் தந்திருக்கிறார்கள். இருந்தாலும், நாங்கள் எதிர்பார்த்த கூட்டம் படத்திற்கு வரவில்லை. ரசிகர்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது, இந்த படத்தை திரையரங்கில் வந்து பாருங்கள். உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் கூட அடித்துக் கொள்ளலாம். பிறமொழி படங்களுக்கு கொடுக்கும் ஆதரவை தமிழ் படங்களுக்கும் கொடுங்கள் என்று வேதனையுடன் பேசி இருக்கிறார்.

Advertisement