ஓர் அறிமுக இயக்குநர் என்றைக்குமே தன்னுடைய முதல் படத்தை மறக்க மாட்டார். அது அவருக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான். அந்த முதல் படத்தில் டாப் நடிகர்கள், டெக்னீஷியர்கள் வேலை பார்த்தால்… படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தால்… இன்னும் ஸ்பெஷலாகத்தானே இருக்கும். வி.இஸட்.துரைக்கு அப்படியான படம்தான் ’முகவரி’. ’ ‘முகவரி’ படத்துக்கு ஒரு ஓட்டுல தேசிய விருது மிஸ் ஆகிடுச்சு…’னு விகடன் பேட்டியில் வி.இஸட்.துரை சொல்லியிருப்பார். இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துக்கொள்ள அவரிடம் பேசினோம்.

Advertisement

முகவரி’ பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது..?

’’பல இயக்குநர்களுக்கு முதல் பட வாய்ப்பு அதிக சிரமங்களுக்குப் பிறகுதான் கிடைக்கும். ஆனால், எனக்கு அப்படியில்லை. ’காதல் கோட்டை’ படம் வருவதற்கு முன்னாடியே அதே மாதிரி ஒரு கதையை லட்சுமி மூவி மேக்கர்ஸ் முரளி சாரிடம் சொல்லியிருந்தேன். அப்போது நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தனால படம் ஆரம்பிக்க தாமதமாச்சு.

Advertisement

கொஞ்ச நாள்ல ’காதல் கோட்டை’ படமும் ரிலீஸாகிடுச்சு. அந்தப் படம் ரீச்சான அதே சமயம், இதே மாதிரி ஒரு கதையை இன்னொரு பையனும் சொல்லிட்டு இருந்தான்னு, நானும் ரீச்சானேன். அப்போது இருந்த டாப் தயாரிப்பாளர்கள் எல்லாரும் என்னை அழைத்துக் கதை கேட்டார்கள். அப்படி நான் சக்கரவர்த்தி சார்கிட்ட சொன்ன கதைதான் முகவரி. ’சூப்பர்யா… இதுதான் உன்னோட முதல் படம்’னு அவர் சொல்லி, எனக்கு கிடைத்ததுதான் ’முகவரி’ வாய்ப்பு.’’

Advertisement

அஜித் இந்தப் படத்திற்குள் எப்படி வந்தார்..?

’’அஜித்தான் இந்தப் படத்தில் நடிக்கணும்னு ஒத்த காலில் நின்னேன். அஜித்தை துரத்தி, துரத்தி ஒரு வழியா நடிக்க வெச்சுட்டேன். அவர் கதை கேட்கவேயில்லை. ’நான் சக்கரவர்த்தியை நம்புறேன், சக்கரவர்த்தி உங்களை நம்புறார்’னு சொல்லித்தான் படத்தில் நடிக்கவே வந்தார். அப்புறம், ’என்னை இம்ப்ரெஸ் பண்ற மாதிரி படம் எடுங்க. உங்களுக்கு கார் கிஃப்ட் பண்றேன்’னு சொன்னார். ‘கார் எல்லாம் வேண்டாம் சார். உங்க கால்ஷீட்தான் வேணும்’னு சொல்லி இந்தப் படத்தை தொடங்கினோம். ரீரெக்கார்டிங்கின்போது படம் பார்த்த அஜித்,’ நீங்க சொன்ன மாதிரி நல்ல படம் எடுத்துட்டீங்க. இப்போ நான் சொன்ன மாதிரி உங்களுக்கு கார் கொடுக்குறேன்’னு சொல்லி, அப்பவே சாண்ட்ரோ கார் கிஃப்ட் பன்ணினார்.’’

Advertisement