சமீப காலமாக தமிழகத்தில் சனாதன ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதியும் திமுக தலைவர் பலரும் அவர்களுக்கு தெரிவித்து வந்த நிலையில் அதற்கு ஆதரவாகவும் சில பேர் அதற்கு எதிர்ப்பதற்கும் சில கருத்துக்களை பதிவிட்டு வந்து இருக்கின்றனர். அந்த வகையில் எம்பி  ஆ.ராசா சனாதனத்தை எச் ஐ வி மற்றும் தொழு நோயுடன் ஒப்பிட்டு பேச்சுக்கு மாற்றுத்திறனாளிகள் நல்ல சங்கம் அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு கடிதம் எழுதி உள்ளது.

அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016 ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கண்ட திமுக எம்பி ஆ.ராசா சனாதனமும் எச்.ஐ.வியும் ஒன்றுதான் என்று பேசி இருந்தார் சனாதனத்தை இவ்வாறு ஒரு நோயாக தான் நாங்கள் பார்க்கிறோம் என்றும் கூறியிருந்தார். அவரின் பேச்சுக்கு நாடு எங்கிலும் எதிர்ப்புகள் அழுத்த நிலையில் அவர் மீது டெல்லியில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement

அவரது பேச்சுக் எதிர்ப்பு தெரிவித்து ஆ ராசாவுக்கு சங்கம் சார்பில் நிர்வாகி நிகிதா சாரா கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அதில் கூறியுள்ளது தொழுநோய் சுகாதார நிலைமை போன்ற முக்கிய தலைப்புகளை பற்றி விவாதிக்கும் போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் பேச்சு பொறுப்புடனும் முக்கியத்துவமானதுவாகவும் இருக்க வேண்டும். வார்த்தைகள் மற்றும் அணுகுமுறைகள் பொதுமக்களின் கருத்து மற்றும் நடத்தையில் ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே இவ்வாறு பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக பேச வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் அவர் கூறிய கருத்திற்கு அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பார். இது குறித்து மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்கான தேசிய ஆணையத்தின் பொதுச்செயலாளர் முரளிதரன் கூறியதது என்னவென்றால் முன்னாள் மத்திய அமைச்சர் தற்போது நாடாளுமன்ற எம்பி. ஆ ராசா கூறிய கருத்து மிகவும் துரதஷ்டமானது.

Advertisement

எச்ஐவி மற்றும் தொழு நோய்களை இழிவானதாக முறையில் பயன்படுத்துவதை ஒருபோது மன்னிக்க முடியாது. என்றும் அவர் கூறியிருந்தார். ஆ ராசாவின் வார்த்தைகளுக்கு நிச்சயம் நாங்கள் எதிராக நிற்கிறோம் இது தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆரம்ப கால கண்டறிதல் மற்றும் சிகிச்சையை மேம்படுத்த அதற்கான முக்கிய முயற்சிகளையும் தடுக்கிறது என்றும் கூறியுள்ளனர். இதுபோன்ற ஆராசாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் அவர்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். அவர் பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறிப்பிட்டு இருந்தனர்.

Advertisement
Advertisement