கணவரை இழந்த பிரபல நடிகை டிஸ்கோ சாந்தி. வாழ்க்கையில் இத்தனை சோகங்களா.

0
36143
disco-shanthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் டிஸ்கோ சாந்தியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவரின் உண்மையான பெயர் சாந்தகுமாரி. இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், பாடல்களுக்கு நடனம் ஆடும் மங்கையாகவும் தான் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் பாலிவுட்டிலும் நடித்துள்ளார். இவர் 1985 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு பல படங்களில் நடித்தும், நடனமாடியும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். டிஸ்கோ சாந்தி, சிறீஹரி என்பவரை 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் 2013ம் ஆண்டில் இறந்துவிட்டார்.

-விளம்பரம்-

தன்னுடைய குடும்பத்தையும்,பிள்ளைகளையும் இவர் தான் பார்த்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை டிஸ்கோ சாந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சினிமா பயணத்தை தொடர்ந்து முதல் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியது, குடும்ப வறுமைக்காக தான் நான் சினிமாவில் விருப்பமில்லாமல் நடிக்க தொடங்கினேன். நான் கதாநாயகியாக தான் சினிமாவில் நடிக்க சென்றேன். ஆனால், என்னை கவர்ச்சி நடிகையாக திரையுலகம் மாற்றி விட்டது. அதனால் நான் ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு நாளும் அழுது புலம்பி இருக்கிறேன். ஒரு சில நேரங்களில் சினிமா வேண்டாம் என்று கூட முடிவு செய்திருக்கிறேன். ஆனால், வறுமை சூழ்நிலை காரணமாக நடித்தேன்.

- Advertisement -

ஊமை விழிகள் படத்தில் ராத்திரி நேரத்து பூஜையில் பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. அதற்கு பிறகு தான் நிறைய பாடல்களில் நடனம் ஆடினேன். குடும்பமாக அந்த படத்தை நாங்கள் தியேட்டரில் பார்த்தோம். என் கவர்ச்சி நடனத்தை பார்த்து நானே முகம் சுளித்து போனேன். என் மீது எனக்கு கோபமும், வேதனையும் வந்தது. என் படங்களை பார்க்க வேண்டாம் என்று நான் என் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டேன். அதற்கு பிறகு நாங்கள் படமே சேர்ந்து பார்க்கவில்லை. இதனால் என் உடன் வேலை செய்பவர்கள் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் என்னை டபுள் மீனிங்கில் பேசினாலும், தப்பா நடக்க முயன்றாலும் அவர்களை நான் கண்டபடி அடிப்பேன்.

'டிஸ்கோ' சாந்தி

-விளம்பரம்-

ஒருமுறை இந்த மாதிரி தான் சூட்டிங் ஸ்பாட்டில் என்னிடம் தப்பா பேசின எம்எல்ஏவின் மகனை வெளுத்து வாங்கினேன். இது போன்ற நிறைய சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது. என்னுடைய துறைக்காக நான் பாதுகாப்பாக இருந்தால் மட்டும் தான் என்னால் வாழ முடியும் என்று நான் உணர்ந்தேன். என்னுடைய கணவரின் மறைவுக்கு பிறகு நான் அவர் தொடங்கிய சேவை பணிகளை செய்கிறேன். நடிக்க வந்த காலம் முதல் இப்போது வரை என்னுடைய சம்பாத்தியத்தில் மூன்றில் ஒரு பகுதியை சேவைக்கு என்று நான் ஒதுங்கி விடுவேன். நாங்கள் படிக்க வைத்த பல பேர் டாக்டர், வக்கீல் என பல பதவியில் இருக்கிறார்கள். என்னுடைய கணவரின் மரணம் வரை அடுத்தடுத்து பல்வேறு ஏமாற்றங்களை எதிர் கொண்டு இருக்கிறேன். ஆனால், வாழ்க்கையின் மீதுள்ள பிடிமானமும், சக மனிதர்களின் மீது அன்பு செலுத்துவதும் தான் என்னுடைய வெற்றிக்கு காரணம் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement