லியோ 100% லோக்கி படம், இவர்கள் எல்லாம் படத்தை பார்க்க வேண்டாம் – விநியோகிஸ்தரின் முதல் review

0
2218
- Advertisement -

லியோ படத்தை குழந்தைகள் பார்க்கக் கூடாது என்று bbfc வெளியிட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

லியோ படம்:

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த லியோ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

இதுவரை லியோ படத்திற்கு இந்தியா, வெளிநாடுகளிலும் முன் பதிவு டிக்கெட் கோடி கணக்கில் விற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ படத்தை குழந்தைகள் பார்க்க கூடாது என்ற புது சர்ச்சை கிளம்பி இருக்கிறது. : அதாவது, bbfc அவர்கள் லியோ படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதால் குழந்தைகள் பார்ப்பதற்கான படம் கிடையாது. பலவீனமானவர்களும் இந்த படத்தை பார்ப்பதற்கு இல்லை. ஆக, லியோ படம் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்ப்பதாக இருந்தாலும் bbfc 18+ வழங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

bbfc அறிவிப்பு:

அதோடு 18 மற்றும் 18க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே லியோ படத்தை திரையரங்கில் பார்க்க முடியும். இதனால் 15 இல் இருந்து 17 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் லியோ படத்தை தியேட்டரில் பார்க்க முடியாது என்று கூறி இருக்கிறது. இந்த நிலையில் விநியோகஸ்தர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை கூறி வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்தில் லியோ பட விநியோகஸ்தரான அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பதிவு ஒன்று போட்டு இருக்கிறது.

விநியோகஸ்தர்கள் கருத்து:

அதில் அவர், விஜய்யின் லியோ படம் ’15 ரேட்டிங் வெர்ஷனாக’ வெளியிடப்படும். BBFC (பிரிட்டிஷ் போர்டு ஆஃப் ஃபிலிம் கிளாசிஃபிகேஷன்) உடனான விவாதத்திற்குப் பிறகு படம் 15+ வெர்ஷனில் வெளியிட அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. #LEO 100% லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்று கூறி இருக்கிறார். அதோடு இன்னும் சில விநியோகஸ்தர்கள், இந்த படம் முழுக்க முழுக்க விஜய்க்கு ஏற்ற மாதிரியும், ரசிகர்கள் கவரும் வகையில் தான் இருக்கிறது. மற்றபடி எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறி வருகிறார்கள்.

Advertisement