‘எவ்ளோ நாள் ஆச்சி இவர பாத்து’ – நீண்ட இடைவெளிக்குபின் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வாணி ராணி சீரியல் நடிகர்

0
340
venuaravind
- Advertisement -

கிழக்கு வாசல் சீரியலில் புது நடிகர் இணைந்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் என்ற புது சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலை ராதிகா சரத்குமார் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த கிழக்கு வாசல் சீரியலில் சஞ்சீவ், ரேஷ்மா, ஏ எஸ் சந்திரசேகர் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
venu

மேலும், இந்த சீரியல் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோ வெளியானது. இந்த சீரியலின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்பே இந்த தொடரில் இருந்து சஞ்சீவ் நீக்கப்பட்டு இருக்கிறார். தற்போது அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து சஞ்சீவ் கூறியது, இந்த சீரியலின் பூஜையில் கலந்து கொண்டது உண்மைதான்.

- Advertisement -

ஷூட்டிங் தொடங்கி சில காட்சிகளில் நடிக்க செய்தேன். ஆனால், இப்போது நான் இந்த சீரியலில் இல்லை. நீங்க இந்த சீரியலில் பண்ணவில்லை என்று என்னிடம் சொல்லிவிட்டார்கள். ஆனால், அதற்கான காரணத்தை நான் இப்போது மீடியா முன்பு விளக்கமாக பேச விரும்பவில்லை என்று கூறி இருந்தார். இவரை தொடர்ந்து கிழக்கு வாசல் சீரியலில் நடிகர் தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில் அவர் கேங்ஸ்டர் சிவா ரோலில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிழக்கு வாசல் சீரியலில் புது நடிகர் ஒருவர் களம் இறங்கி இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லைங்க, சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் வேணு அரவிந்த். இவர் ராதிகா நடித்த வாணி ராணி சீரியலில் பூமிநாதன் என்ற வேடத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு சந்திரகுமாரி என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இது மட்டும் இல்லாமல் இவர் பிற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் அலைபாயுதே, வல்லவன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அதன் பின் சமீபத்தில் வெளியான ஓ மணப் பெண்ணே என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார். தற்போது இவர் சபாஷ் சரியான போட்டி என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது கிழக்கு வாசல் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆக இருக்கிறார்.

மேலும், சீரியலில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து நடிகர் வேணு அரவிந்த் கூறியிருப்பது, கிழக்கு வாசல் சீரியலில் நடிப்பதில் நான் அதிக ஆர்வமாக உள்ளேன். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொலைக்காட்சி பக்கம் திரும்பி இருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு பிறகு ராதிகா சரத்குமார் உடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன். பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்விக்க விரும்புகிறேன். கிழக்கு வாசல் உடனான என்னுடைய புதிய பயணத்தில் எனக்கு மக்கள் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement