‘அத சொன்னா மிரட்டல் வரலாம்னு சொன்னாங்க’- செல்லம்மா சீரியலில் இருந்து விலகியது குறித்து திவ்யா

0
628
jeni
- Advertisement -

செல்லம்மா சீரியலில் இருந்து விலகிய காரணம் குறித்து தற்போது திவ்யா கணேஷ் அதிர்ச்சி தகவல் ஓன்று கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் ரசிகர்களின் அதிக வரவேற்பை பெட்ரா சீரியல் பாக்கியலட்சிமி. இந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை திவ்யா கணேஷ். இவர் ஏற்கனவே லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி தொடர் மூலம் தான் கேளடி மத்தியில் அறிமுகமானார். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தனெக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார். அதே சமயத்தில் திவ்யா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா என்ற தொடரிலும் மேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் இவர் திடீரென செல்லம்மா சீரியலில் இருந்து விளக்கினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இப்படிபட்ட நிலையில் தற்போது திவ்யா கணேஷ் பாக்கியலட்சிமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது ஒரு பேட்டியில் பேசியிருந்த திவ்யா கணேஷ் தான் செல்லம்மா சீரியலில் இருந்து விலக்கியதற்கான காரணத்தை அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

திவ்யா கணேஷ் கூறியது :

திவ்யா கூறுகையில் நான் பாக்கியலட்சிமி சீரியலில் இருந்து வெளியேறவே எனக்கு விருப்பமில்லை அந்த சீரியலில் தான் என்னை பிரபலமாக்கியது. ஒருமுறை விமான நிலையத்தில் ஒருவர் நான் ஏன் சீரியலில் அதிகமாக காட்சிகளை நடிக்காவில்லை என்று கேட்டிருந்தார். ஆனால் எனக்கு கொடுத்திருந்த கதாபாத்திரத்தில் நான் சரியாக நடித்திருந்தேன். பாக்கியலட்சிமி சீரியலை வீட்டுக்கு போகவே எனக்கு விருப்பமில்லாத காரணத்தினால்தான் கிடைத்த பல வாய்ப்புகளை நான் தவிர்த்து வந்தேன்

-விளம்பரம்-

செல்லம்மா சீரியலில் வாய்ப்பு கிடைத்த போது ஜெனி கதாபாத்திரத்திற்கும் மேகா கதாபாத்திரத்துக்கும் என்னால் வித்தியாசம் கொடுக்க முடியும் கண்டிப்பாக செய்வேன் என்று நினைத்திருந்தேன். இன்ஸ்டாகிராம் நேரலையில் கூட நான் அந்த காரணத்தை வெளிப்படையாக கூறியிருந்தேன். அதற்க்கு பலரும் அடுத்த படப்பிடிப்பில் எதாவது பிரச்சனை ஏற்படலாம், யாராவது உன்னை மிரட்டலாம் எதற்க்கு நீ தனிப்பட்ட காரணம் என்று ஏன் சொன்னாய்? என்று கேட்டிருந்தார்கள்.

நான் செய்யும் பணியில் தடை ஏற்படுகிற மாதிரியும் என்னை நடிக்க விடாத மாதிரியும் இருந்தது. காலையில் தொடங்கி மலை வரையிலும் படக்குழுவுடன்தான் இருந்து வந்தேன். வேலையை நிம்மதியாக செய்ய முடியவில்லை. செல்லம்மா சீரியலை விட்டு வருவதற்கு முன்னாள் என்னை முடிந்த அளவிற்கு சரி செய்தேன் ஆனால் முடியவில்லை. எனவேதான் இது சரிப்பட்டு வராதென்று சீரியலை விட்டு வந்துவிட்டேன். என்னுடைய வேலையில் இடையூறு இருந்ததினால் மட்டுமேதான் நான் அந்த சீரியலை விட்டு வந்தேன். அது எனக்கு மிகவும் மன அழுத்தமாக இருந்தது என்று பல விஷியங்களில் அவர் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

Advertisement