திடீரென மகாநதி சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- காரணம் இது தான், அவரே போட்ட பதிவு

0
427
- Advertisement -

மகாநதி சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் திவ்யா கணேஷ். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கேளடி கண்மணி’ தொடர் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதற்கு பின் இவர் லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது பாக்கியலட்சுமி சீரியல் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார்.

- Advertisement -

பாக்கியலக்ஷ்மி :

இந்த தொடர், பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. மேலும், இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திவ்யா கணேஷ். அதேபோல் திவ்யா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செல்லம்மா’ என்ற தொடரிலும் மேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின் இடையில் இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

திவ்யா கணேஷ் நடித்த சீரியல்கள் :

மேகா கதாபாத்திரத்தில் ஸ்ரேயா என்பவர் நடிக்கிறார். ஆனால், திவ்யா சீரியல் இருந்து விலகியதற்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. அதன் பின் இவர் மகாநதி என்ற சீரியலில் நடித்து இருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி சீரியலும் ஒன்று. இந்தத் தொடர் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் சந்தானம் என்கிற நபர் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மகாநதி சீரியல் :

அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து இருந்தார்கள். எதிர்பாராத விதமாக சந்தானம் இறக்க மொத்த குடும்ப பாரம் கங்கா,காவேரி மீது வருகிறது. இதனால் இவர்கள் எதிர்கொள்ளும் ப்ரச்சனை தான் சீரியல் கதை. மேலும், மகாநதி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடித்திருந்த பிரதீபா விலகி இவருடைய கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் நடித்தார். கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

சீரியலில் விலகிய நடிகை:

இப்படி இருக்கும் நிலையில் மகாநதி சீரியலில் இருந்து நடிகை திவ்யா கணேஷ் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாவில் திவ்யா கணேஷ், எனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். இதனால் தான் என்னால் மகாநதி சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. என்னுடைய கதாபாத்திரத்துக்காக மகாநதி சீரியல் டீம் வேறொரு நடிகையை தேட வேண்டும். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement