கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக ரம்யா ஸ்பந்தனா போட்டிருக்கும் ஒரு ட்விட்டர் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.இவருடைய பெயர் திவ்யா ஸ்பந்தனா. இவர் கர்நாடக மாவட்டம் பெங்களூரில் கடந்த 1982ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய குடும்பம் ஒரு காங்கிரஸ் கட்சியின் அரசியல் பின்புலம் ஒரு குடும்பம் ஆகும். இவருடைய அம்மா ரஞ்சிதா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.

இவருடைய தாத்தா எஸ்.எம் கிருஷ்ணா இந்தியாவின் ஒரு மூத்த அரசியல் தலைவர் மற்றும் ஆளுநராக பணியாற்றியவர் ஆவார். திவ்யாவிற்கு குத்து ரம்யா என்ற பெயரும் உள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த குத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். இதனால் இவருக்கு குத்து ரம்யா என்ற பெயர் வந்தது. பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்த குத்து ரம்யா, தமிழில் கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், ஆகிய ஹிட் படங்களில் நடித்தார்.

Advertisement

தற்போது தீவிர அரசியலில் இருக்கும் நடித்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவராக இருக்கும் திவ்யா, மாண்டியா பாராளுமன்ற தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதிய ஜனதா கட்சியை மிக நூதனமாகவும் மக்களுக்கு எளிதில் சென்று சேரும் வகையில் விமர்சனம். அந்த வகையில் தற்போது நடிகைகளின் பிரச்சனைகளை பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றால் போட்டுள்ளார்.

அந்த பதிவில் “சமந்தா விவாகரத்தானத்திற்கும், நடிகை சாய் பல்லவி கூறிய கருத்திற்கும், ராஷ்மிகா காதலரை பிரிந்ததற்காகவும், தற்போது பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் ஆடை அணிந்ததற்கும் என பல பெண்களை எல்லாவற்றிக்கும் இந்த உலகம் விமர்ச்சிக்கிறது. சுதந்திரம் என்பது எல்லோருடைய தனிப்பட்ட உரிமை, மேலும் பெண்கள் துர்கா தேவியின் மறு உருவம். எனவே பெண்களுக்கு எதிராக எழுப்படும் இந்த விஷியங்களுக்காக நாம் எதிர்த்து போராட வேண்டும் என தன்னுடய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Advertisement

இதற்கு ஒருபுறம் பெரிய வரவேற்பு இருந்தாலும் மறுபுறம் பலரும் தீபிகா படுகோன் “பதான்” படத்தில் கவர்ச்சி ஆடையில் இந்தியாவில் கலாச்சரத்தை இழிவு படுத்துவதாக காரணம் காட்டி பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் பாய்காட் தீபிகா படுகோன், ஷாருக்கான், பதான் என்ற ஹாஸ்டேகுகளை பயன்படுத்தி தங்களுடைய எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இதே போன்ற பிரசாரத்தினால் தான் பிரபல பாலிவுட் நடிகரான ஆமிர் கான் பெரும் பொருட்செலவில் நடித்திருந்த ” லால் சிங் சத்தா” திரைப்படம் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement