தனது மகள் குறித்து நடிகை ஜோதிகா போட்டிருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருபவர் சூர்யா-ஜோதிகா. இவர்கள் இருவரும் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள். அதிலும, தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.
பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா கால் திருமணம் செய்து கொண்டார். முதலில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்புகள் பல வந்தாலும் பல போராட்டங்களுக்குப் பிறகு இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டார். மீண்டும் இவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.
சூர்யா மற்றும் ஜோதிகா:
சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு தியா என்னும் மகளும், தேவ் என்னும் மகனும் உள்ளனர். சமீபத்தில் கூட தியா சூர்யாவின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது. தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது குழந்தைகளின் படிப்பிற்காக மும்பையில் செட்டில் ஆகி இருப்பது நாம் அருந்ததே. இந்நிலையில் தியா சூர்யா பற்றிய செய்திதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தியாவின் ஆவணப்படம்:
அதாவது சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா சூர்யா தற்போது ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். மேலும், இந்த ஆவணப்படம் திரைப்பட விழாவில் விருதும் வென்றுள்ளது. தியா இயக்கியுள்ள ‘The Untold Story of Women Behind the Scenes’ என்ற ஆவணப்படம், திரிலோகா இன்டர்நேஷனல் ஃபிலிம் பேர் விருதுகளில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினையும், சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற விருதுனையும் வென்றுள்ளது.
ஜோதிகா பதிவு:
இந்த செய்தியை நடிகை ஜோதிகா தனது instagram பக்கத்தில் தனது மகள் வென்ற சான்றிதழ்களோடு பதிவிட்டுள்ளார். அதில்,’பொழுதுபோக்கு துறையில் பெண் கேஃபர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்த ஒரு மாணவியாக அர்த்தம் உள்ள ஆவண படத்தை உருவாக்கியதற்காக உன்னை நினைத்து பெருமை அடைகிறேன் தியா. பெண்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினையை வெளிக் கொண்டு வந்ததற்காக நன்றி. மேலும், இதுபோல் தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். அதோடு தனது மகள் இயக்கியுள்ள ஆவணப்படத்தின் யூடியூப் லிங்கினையும் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் வாழ்த்து:
ஜோதிகாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் தியாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தப் பதிவினை ஜோதிகா தனது instagram பக்கத்தில் போஸ்டாக பதிவிட்டுள்ளார். அந்தப் போஸ்டினை ஸ்டோரியாகவும் பகிர்ந்துள்ளார். அதேபோல் இந்த போஸ்டில் எதிலும் சூர்யாவை ஜோதிகா மென்ஷன் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு தியா உருவாக்கி உள்ள ஆவணப்படம் மொத்தம் 13 நிமிடங்கள் 13 நொடிகள் இடம் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை தற்போது சூர்யா ஜோதிகாவின் ரசிகர்கள் கண்டு மகிழ்கின்றனர்.