நாயகி உடலில் அது எத்தனை இருக்கிறது ? ஹீரோயின் குறித்து ஹீரோவிடம் அநாகரீகமாக கேட்ட பத்திரிகையாளர்.

0
499
neha
- Advertisement -

பட புரமோஷன் விழாவில் நடிகை குறித்து அநாகரிகமாக பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பொதுவாகவே சினிமாவில் உருவாகும் ஒவ்வொரு படமும் திரையரங்கிற்கு வருவதற்கு முன்னால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தைப் பற்றி கூறுவது வழக்கமான ஒன்று. அதற்கு பத்திரிகையாளர்களும் படம் குறித்து கேள்வி கேட்டு வருவார்கள். இது தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடந்து வருகிறது.

-விளம்பரம்-

இதன் மூலம் தங்களுடைய படம் மக்கள் மத்தியில் எளிதாக சென்றடையும் என்ற காரணத்தினால் தான் படக்குழுவினர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான படத்தின் ட்ரைலர் விழாவில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இருந்தார்கள். அப்போது பத்திரிகையாளர் கேட்ட கேள்வி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் படம் டிஜே டில்லு. இந்த படத்தில் கதாநாயகனாக சித்து நடித்திருக்கிறார்.

- Advertisement -

நேகா ஷெட்டி :

கதாநாயகியாக நேகா ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கதாநாயகன், கதாநாயகி உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது பத்திரிக்கையாளர்கள் படக்குழுவினரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்கள். படக்குழுவினரும் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து வந்தார்கள். உடனே ட்ரெய்லரை சுட்டிக்காட்டி பத்திரிக்கையாளர் ஒருவர்,

அநாகரிகமான கேள்வி :

நாயகன் சித்து, நாயகி நேகாவின் உடலில் எவ்வளவு மச்சம் இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தீர்களா? என்று அநாகரிகமான கேள்வி எழுப்பினார். அதற்கு நாயகன் பதில் அளிக்காமல் மறுத்துவிட்டார். இப்படி இவர்கள் பேசியிருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அந்த வீடியோவை நடிகை நேகா தன்னுடைய டிவிட்டரில் பகிர்ந்து கூறி இருப்பது, இந்த கேள்வி எதிர்பாராதவிதமானது.

-விளம்பரம்-

தயாரிப்பாளர் நேகாவிடம் மன்னிப்பு :

ஆனால், இந்த கேள்வி அந்த பத்திரிக்கையாளர் தன் வாழ்வில் உள்ள பெண்களிடம் அவர் அளிக்கும் மரியாதையை காட்டுகிறது என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த அந்த படத்தின் தயாரிப்பாளர் நேகாவிடம் மன்னிப்பு கேட்டார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் பலரும் நேகாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தும், பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள்.

Advertisement