இந்திய சினிமாவில் அதிக அளவில் கதாநாயகர்களில் குழந்தைக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் என்றால் அது ‘மாஸ்டர் சுரேஷ்’ தான்.
ஆம், அந்த காலத்தில் ரஜினி,கமல்,விஜயகாந்த்,அமிதாப் பச்சன் என கிட்டத்தட்ட 200+ படங்களுக்கு மேல் சிறு வயதிலேயே நடித்தவர் சுரேஷ்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படிக்காதவன் படத்தில் சிறு வயது ரஜினி தன்னுடைய தம்பியை வளர்க்கும் அந்த சிறு வயது ரஜினி கேரக்டரில் நடித்தவரும் சுரேஷ் தான். இவருடைய உண்மையான பெயர் சூரிய கிரன்.
சிறு வயதிலேயே நடிப்பில் ஊரிப்போன இவர், உலக நாயகன் கமலஹாசன் மற்றும் ரவி தேஜாவிடம் ஸ்க்ரிப்ட் ரைட்டிங் கற்றுக் கொண்டுள்ளார். கவிதா முதல் கல்பனா வரை என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய இந்த படத்தில் மொத்தம் 18 ஹூரோயின்கள். மேலும், தெலுங்கு திரையுளகிலும் 5 படங்களை இயக்கியுள்ளார் சூரியகிரண். சமுத்திரம் படத்தில் சரத் குமாருக்கு தங்கசியாக நடித்த காவேரிக்கும் சூரிய கிரணுக்கும் திருமணம் நடந்துள்ளது.