தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார்.இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

Advertisement

இந்நிலையில் இப்படத்தின் மாமன்னனாகிய வடிவேலு விற்கு மனைவியாகவும், வீராயியாகவும் நடித்தவர் தான் கீதா கைலாசம். இவர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் உலக நாயகன் கமலஹாசனின் குருவான கே.பாலச்சந்திரின் மருமகள் ஆவர். சமீபத்தில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ஆர்யா நடித்திருந்த மாபெரும் வெற்றி படமான சார்பட்ட பரம்பரையில் பசுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு வெளியான வீட்டுல விஷேசம் படத்திலும் நர்ஸாக நடித்திருந்தார். இப்படி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த கீதா கைலாசம் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் சிறியது என்றாலும் பலரது கவனத்தை ஆவர் ஈர்த்தார். இந்நிலையில் இயக்குனர் சிகரமான பாலச்சந்திரரின் மருமகள் இப்படி கைதட்டல்களை பெறுவதில் ஆச்சரிய படுவதற்கு ஒன்றுமில்லை என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

Advertisement

இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கீதா கைலாசம் கூறுகையில் “மாமன்னன் படத்தில் நான் வடிவேலு அவர்களுடன் இணைத்து நடிக்க வேண்டும் என்பதை கேட்டு எனக்கு பயமாக இருந்தது. அவருடன் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. நான் இதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் அவை பெரிதாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் ம்,மாமன்னன் படத்தில் நடித்தது ரன்னுடைய நடிப்பு திறமையை பலர் பார்த்த்னர்.

Advertisement

அதுவும் நான் இறுதி காட்சிகளின் போது ரவுடிகளுக்கு பயந்து கட்டிலுக்கு அடியே சென்று மறைந்து கொள்வதெல்லாம் அருமையாக இருந்ததாக பலர் பாராட்டினார்கள் என்றார் கீதா கைலாசம். மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தின் மூலம் எனக்கு திரையுலகில் நல்ல அடையாளம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார் ஆவர்.

Advertisement