‘என்ன சிம்ரன் இதெல்லாம்’ படு கிளாமராக நடித்துள்ள டாக்டர் பட நடிகை . புதிய படத்தின் டீஸரை கண்டு ரசிகர்கள் வருத்தம்.

0
81428
priyanka
- Advertisement -

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையறங்கில் வெளிவந்த டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இந்த படம் கோடியில் வசூலை குவித்து வருகிறது. மேலும், இந்த படத்தின் மூலம் பிரியங்கா அவர்கள் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார்.

-விளம்பரம்-

நடிகை பிரியங்கா அவர்கள் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் இது தான் இவருடைய டாக்டர் படம்.

இதையும் பாருங்க : காயங்களுடன் தான் வந்தார் – பிக் பாஸில் இருந்து வெளியேறிய நமீதா குறித்து மருத்துர்கள் ஷாக்கிங் தகவல்.

- Advertisement -

முதல் படத்திலேயே இவருடைய நடிப்பும், அழகும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது தென்னிந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே பிரியங்கா மோகன் திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பிரியங்கா மோகனின் டிக் டாக் மூவி படத்தின் டீசர் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ரத்த கண்ணீர் விட்டு விட்டு படத்தை வெளியிடாதீர்கள் என்று கோசம் போட்டு வருகிறார்கள். அப்படி என்ன தான் அந்த படத்தில் உள்ளது என்று பார்த்தால் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் அவர்கள் மிக கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அதிலும் ஒரு காட்சியில் டி – ஷர்ட்டை கழட்டுவது போன்ற காட்சிகளிலும் படு கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் பிரியங்கா. தற்போது இந்த படத்தின் டீசர் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பிரியங்காவை இப்படி கவர்ச்சியாக பார்க்க முடியவில்லை என்று கமெண்டுகளை போட்டு வருகிறர்கள்.

மேலும், டாக்டர் படத்தில் இவரை அழகான கியூட்டான கதாபாத்திரத்தில் பார்த்துவிட்டு இந்த மாதிரி கிளாமர் கதாபாத்திரத்தில் பார்க்க எங்களால் முடியாது. தயவு செய்து இந்த படத்தை வெளியிடாதீர்கள். ஏன் பிரியங்கா இப்படி செய்தீர்கள், என் மனது உடைந்து விட்டது என்று தாறுமாறாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். தற்போது இந்த டிக் டாக் மூவி குறித்த கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement