டாக்டர்,பீஸ்ட் படத்தில் வந்த கிளியின் மனைவி மற்றும் மகளை பார்த்துளீர்களா ? இதோ புகைப்படம்.

0
259
- Advertisement -

டாக்டர் படத்தில் கிளியின் ரோலில் நடித்த நடிகரின் குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்று படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்திருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் பிரியங்கா, அர்ச்சனா, யோகி இந்த உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இஇந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்து இருந்தார்கள். ந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனால் இந்த டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது படமாக நெல்சன் அவர்கள் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

பீஸ்ட் படம்:

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் ஹைஜாக் சிக்கிக் கொள்கிறார்.

பீஸ்ட் படம் விமர்சனம்:

விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் என்று கூறி இருக்கிறார்கள். பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இருந்தது. இருந்தாலும் நல்ல வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டாக்டர்,பீஸ்ட் படத்தில் நடித்த நடிகரின் குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

கிளி குடும்ப புகைப்படம்:

அதுஎன்னவென்றால், டாக்டர் படத்தில் கிளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் சிவா அரவிந்த். இவர் டாக்டர் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பீஸ் படத்திலும் நடித்திருந்தார். தற்போது நடிகர் கிளி என்கிற சிவா அரவிந்தின் குடும்ப புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு அழகான மனைவி, மகள் இருக்கிறார்களா! என்று வியந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

தலைவர் 169 படம்:

தற்போது நெல்சன் அவர்கள் ரஜினியை வைத்து படம் பண்ணுகிறார். நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘தலைவர் 169’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement