செல்லம்மா பாடல் புகழ் ஜொனிதாவின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டாக்டர். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படம் வெளிவருவதற்கு முன் இந்த படத்தின் செல்லம்மா செல்லம்மா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது. அதோடு சோசியல் மீடியா முழுவதும் இந்த பாடல் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலின் மூலம் ஜோனிடா காந்தி அவர்களுக்கு சோஷியல் மீடியாவில் ஒரு தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது.
மேலும், ஜோனிட காந்தி அவர்கள் இந்தோ- கன்னடிய பாடகி ஆவார். இவர் டெல்லியில் பிறந்து இருந்தாலும் தன்னுடைய ஏழு வயதிலேயே கனடாவிற்கு சென்றுவிட்டார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம் என பல மொழிகளில் பாடியுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் தான் பாடகியாக இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் பாடினார்.
இதையும் பாருங்க : தமிழ் கடவுள் வெள்ளையா தான் இருக்கணுமா, கருப்பு லட்சுமி தேவியாக நடத்திய போட்டோ ஷூட் மூலம் மாறிய வாழ்கை. இதோ அந்த புகைப்படம்.
இதற்குப் பிறகு இவர் 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, வேலைக்காரன், இரும்புத்திரை, கோலமாவு கோகிலா என பல படங்களில் பாடியுள்ளார். தற்போது இவர் டாக்டர் படத்தில் செல்லம்மா என்ற பாடலின் வீடியோவில் ஆடிக்கொண்டே பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இப்படி நிலையில் இவர் நீச்சல் உடை போன்ற உடையில் இருக்கும் படு கிளாமரான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க இவர் நடிகையாக சினிமா உலகில் அவதாரம் எடுக்கப் போகிறார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் வாக்கிங்/ டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் என்ற படத்தில் ஜோனிடா காந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக சூரரைப்போற்று படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விநாயக் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பை தற்போது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.