ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, சின்னத்தம்பி பவானி, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.
மீதமுள்ள பல போட்டியாளர்கள் யார் என்பதே தெரியவில்லை. அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இறக்கின்றனர் . அதில் மாடல் அழகியான சுருதியும் ஒருவர். நவம்பர் 24, 1995 சேலத்தில் பிறந்த இவர் மாடலிங் செய்து வருகிறார் . இவரது கருப்பான நிறம் காரணமாக இவர் ஆரம்ப காலத்தில் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில் இவர் பேசியது பலரை கண் கலங்க வைத்தது. அதில் பேசிய அவர், என்னோட அப்பாவுக்கும் என்னோட அம்மாவோட அப்பாக்கும் ஒரே வயசு.
முதல் மனைவி இறந்துடுத்தலா என்னோட அம்மாவ எங்க அப்பாவ இரண்டாவது மனைவியா கல்யாணம் பண்ணிகிட்டாங்க. எங்க அம்மாவுக்கு அப்போ 18 வயசு அப்பாக்கு 50 வயசு கடந்துடிச்சி.முதல் மனைவிக்கு 5 பிள்ளைகள் அதில் நான்கு பேர் என்னுடைய அம்மாவை விட பெரியவர்கள். எங்க அம்மா கர்ப்பமாக இருந்த போது எங்க அப்பா சொல்லி இருக்காரு, எனக்கு வாரிசு இருக்கு உனக்கு வேணும்னா குழந்தை பெத்துக்கோ அப்படின்னு எங்க அம்மாகிட்ட சொல்லிட்டாரு.
எங்க அப்பாவுக்கு நான் ஒரு தேவ இல்லாத மகள் தான். 13 வயசுல எங்க அப்பா இறந்துட்டாரு அதுவரைக்கும் அவர அப்பான்னு கூப்பிடாதே இல்ல. என்னை அவர் தொட்டு கூட பேசினது இல்ல. அவரு இறந்த அப்பகூட நான் சந்தோஷம்தான் பட்டேன் எங்க அம்மா மிகவும் அழகாக இருப்பார் என அந்த காரணத்தால் அவர் எப்போதும் அம்மாவை சந்தேகப்படுவார் அடிக்கடி எங்களை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சாப்பாடு போட போட மாட்டார் நிறைய நாள் வெளியில் படுத்து இருக்கிறேன். அதனால் எங்க அப்பா இறந்த பின்னர் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். இனிமேல் நாம் சுதந்திரமாக இருக்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால், அதன் பின்னர்தான் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். பின்னர் எப்படியோ கஷ்டப்பட்டு ஸ்போர்ட்ஸ் கோட்டால சீட் வாங்கி படிச்சேன். பின்னர் கோயம்பத்தூரில் ஒரு கம்பெனியில் ஒரு வேலையில் சேர்ந்தேன்.ஆனால், அந்த வேலையில் முன்னேற்றம் இல்லை என்று சென்னைக்கு வந்தேன். ஆனால் இங்கே வந்து நான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கிற அதனால் ஒரு மார்க்கெட்டிங் வேலையில் சேர்ந்தேன் அப்போதுதான் எனக்கு மாடலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு நிகழ்ச்சியில் மாடல் ஒருவர் வரவில்லை என்று அவருக்கு பதிலாக என்னை மாடலிங் செய்ய கேட்டார்கள் நானும் செய்தேன் அந்த நிகழ்ச்சி மூலம் வந்த ஒரு தொடர்பு மூலமாக ‘Darkess Divine ‘ என்ற ஒரு கான்சப்ட்டில் போட்டோ ஷூட் ஒன்றும் பண்ணோம்.
தமிழ் கடவுள்களை எல்லாம் நாம் வெள்ளையாகத் தான் பார்த்திருப்போம் அதனால் கொஞ்சம் கருப்பாக காட்ட வேண்டும் என்று அந்த கேலண்டர் போட்டோஷூட்டில் நான் லட்சுமி தேவியாக செய்திருந்தேன் அந்த புகைப்படம் இன்டர்நெட்டில் வைரல் ஆனது அதிலிருந்து என்னை பிபிசி போன்ற சேனல்களில் இன்டர்வியூ எடுத்து நான் தெரிய ஆரம்பித்தேன் என்று கூறி இருந்தார். அவர் சொன்ன அந்த போட்டோ ஷூட் இதான்.