டாக்டர் பட நாயகி பிரியங்காவா இது ? வைரலாகும் அவரின் கல்லூரி பருவ புகைப்படம். நம்பவே முடியலயேப்பா ?

0
1828
priyanka
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்ணனி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்திருக்கிறது. இயக்குனர் நெல்சன் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் பிரியங்கா, அர்ச்சனா, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுது. மேலும், இந்த படத்தில் அழகான க்யூட்டான கதாநாயகியாக வலம் வந்தவர் பிரியங்கா அருள் மோகன். இந்த படத்தின் மூலம் பிரியங்கா அவர்கள் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார் என்றே சொல்லலாம். நடிகை பிரியங்கா அவர்கள் இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

- Advertisement -

பிரியங்கா அருள் மோகன் நடித்த படங்கள்:

அதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். பின் தமிழில் முதல் படம் டாக்டர் தான். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பும், அழகும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது தென்னிந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே பிரியங்கா மோகன் திகழ்ந்து வருகிறார். மேலும், டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்தில் ஜோடியாக பிரியங்கா நடித்து இருக்கிறார்.

பிரியங்கா அருள் மோகன் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் பிரியங்கா நடித்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளி வந்திருந்த சும்மா சூர்ன்னு என்ற பாடலுக்கு சூர்யா- பிரியங்கா ஆடி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பிரியங்கா அருள் மோகனின் பழைய புகைப்படம் :

அந்த பாடல் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் பயங்கர டிரன்டிங் ஆகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இவரது புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார். இப்படி ஒரு நிலையில் பிரியங்கா அருள் மோகனின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், பிரியங்கா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

புகைப்படத்தை வைரலாகும் ரசிகர்கள்:

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘யாருன்னு தெரியுதா’? என்று மீம்ஸ்களை உருவாக்கி இவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தையும் கல்லூரிக்கு பிறகு தற்போது இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்கள். அந்த இரண்டு புகைப்படத்தில் பயங்கர வித்தியாசம் இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் வியந்து போய் விட்டார்கள். இது உண்மையாலுமே டாக்டர் படம் பிரியங்காவா! என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

Advertisement