ரவுண்டு கட்டி கேள்வி கேட்ட அதிகாரிகள், ஷர்மிகா கூறிய பதிலை ஏற்க மறுத்து விசாரணை குழு எடுத்த முடிவு.

0
485
- Advertisement -

கடந்த சில மாதமாக சோசியல் மீடியாவில் சர்ச்சையான சில மருத்துவ அறிவுரைகளை கூறி வரும் டாக்டர் ஷர்மிகா மீது பல சோசியல் மீடியா மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் பல விதமான புகார்கள் வந்த நிலையில் அவரை நேரில் ஆஜராக சொல்லி தமிழ் நாட்டின் வித மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. இந்த விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றிக்கு ஷர்மிகா எவ்வாறு பதிலளித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

முரண்பாடான மருத்துவ கருத்துக்கள் :

மனிதர்கள் நம்மை விட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் அஜீரண கோளாறுகள் வரும், எனவே மாடு பெரிய மிருகம் என்பதினால் சாப்பிட கூடாது என்றும், நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பகம் பெரிதாகும் என்றும், குப்பற படுத்தால் மார்பகத்தில் புற்றுநோய் ஏற்படும் என்றும், ஓர் குலாப் ஜாமும் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும் என்று பல சர்ச்சையான விஷியங்களை கூறி சோசியல் மீடியாவில் விடீயோக்களை மருத்துவர் ஷர்மிகா வெளியிட்டு வந்தார்.

- Advertisement -

நேரில் ஆஜராக உத்தரவு :

இந்நிலையில் மருத்துவர் ஷர்மிகா தவறான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பரப்புகிறார் என்று பரவிய நிலையில், சீதா மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்டு ஷர்மிகாவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் 24-01-2023 அன்று 11மணிக்கு நேரில் ஆஜராகும் படி கூறியிருந்தது. அந்த படி இன்று மருத்துவர் ஷர்மிகா தமிழ் நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ் தலைமையில் இணை இயக்குனர் பார்த்தவன் மற்றும் மருத்துவ குழுவின் முன்பு விசாரணை நடத்தப்பட்டது.

1 மணிநேரம் விசாரணை :

இந்த விசாரணைக்கு தமிழ் நாடு அரசின் பதிவு பெற்ற சித்த மருத்துவர்கள் ஷர்மிகாவிடம் 1 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள் . விசாரணையின் முடிவில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து விரைந்தார் ஷர்மிகா. இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி விசாரணை குழு கூறியதாவது “ஷர்மிகாவிடம் மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக கருத்து கூறியது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

-விளம்பரம்-

அந்த மூன்று கேள்விகள் :

அந்த விசாரணையில் மருத்துவர் ஷர்மிகாவிடம் குறிப்பாக மாட்டு இறைச்சியை சாப்பிட்டால் செரிமானம் ஆகாது, ஒரு குலாப் ஜாமூன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை கூடும். நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் என்ற கருத்துக்களை மையப்படுத்தி சில கேள்விகளுக்கு பதில் கேட்கப்பட்டது. ஆனால் ஷர்மிகா கூறியது திருப்திகரமாக இல்லாத காரணத்தினால் வரும் பிப்ரவரி 10 தேதி எழுத்து வடிவிலான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகுதான் வல்லுநர் குழு முழு அறிக்கையையும் அறிவிக்கும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement