மோகனுடன் அடுத்த சர்ஜிகள் ஸ்ட்ரைக். அஜித் படத்தின் மாஸ் கெட்டப்பில் அடுத்த படம் குறித்து ட்வீட் செய்த ரிச்சர்ட்.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்துள்ளார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
https://twitter.com/richardrishi/status/1252568679084109830
இந்த படம் பெரிய அளவு பட்ஜெட் இல்லை என்றாலும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை முந்தியது. இந்த படம் குடும்ப பெண்களின் ஆதரவையும் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பு குறித்து சமீபத்தில் தெரிவித்துள்ளார் மோகன். அதில், ஜி, திரெளபதி என கடவுளின் பெயரை வைத்ததால்தான் இப்படத்தின் மீது வன்மம் காட்டப்படுவதாக தெரிவித்துள்ளார் தான் இயக்கும் அடுத்த படத்துக்கும் கடவுள் பெயரிலேயே தலைப்பு வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறி இருந்தார்.
இதையும் பாருங்க : ஷூட்டிங்கில் நேர்ந்த சம்பவத்தால் கால் செயலிழந்து விட்டது- பில்லா 2 பட நடிகரின் தற்போதைய நிலை – வீடியோ இதோ.
மேலும், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜூப்லின், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் கூட்டணியில் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, திரௌபதி படம் வெளியாவதற்கு முன்பாக பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரிச்சர்ட்டிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதில், இயக்குனருடன் பேசியபோது எனக்கு பெரிய ஹீரோக்களின் படம் வந்தால்கூட என்னுடைய அடுத்த படம் ரிச்சர்ட் உடன் தான் இருக்கும் என்று இயக்குனர் கூறி இருந்தார்.
https://twitter.com/mohandreamer/status/1249219808412884993
இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பு குறித்து சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார், திரௌபதி பட நாயகன் ரிச்சர்ட். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், என்னுடைய அடுத்த படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். மோகனுடன் சர்ஜிகல் ஸ்ட்ரைக், சூப்பர் டீம் செம தீம் என்று பதிவிட்டுள்ள ரிச்சர்ட் வேதாளம் அஜித் கெட்டப்பில்இருக்கும் தனது புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இதுதான் உங்கள் அடுத்த படத்தில் கெட்டப்பா என்று கேட்டு வருகின்றனர்.
இதையும் பாருங்க : பணமாகவும் இல்லை, பொருளாகவும் இல்லை. விஜய் இப்படி தான் உதவி செய்ய போகிறாரா?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது அடுத்த பட அறிவிப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மோகன், எங்களின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை சித்திரை முதல் நாளில் வெளியிடும் ஆவலில் இருந்தேன். ஆனால் தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் அறிவிப்பை சில காலம் தள்ளி வைத்து உள்ளேன்.. அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவும்.. நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.