பணமாகவும் இல்லை, பொருளாகவும் இல்லை. விஜய் இப்படி தான் உதவி செய்ய போகிறாரா?

0
5460
Vijay
- Advertisement -

தற்போது இந்தியாவில் கொரோனாவால் 18,985 பேர் பாதிக்கப்பட்டும், 603 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் நாடு முழுவதும் பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்குகிறார்கள். பொது இடங்கள், கடைகள்,கோவில்கள், படப்பிடிப்பு எல்லாம் மூடப்பட்டு உள்ளது. மேலும், ஊரடங்கினால் வருமானம் இல்லாமல் ஏழை மக்கள், தினந்தோறும் கூலி வேலையும் செய்யும் மக்கள் என பல பேர் தவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
master

படப்பிடிப்புகள் எல்லாம் மூடப்பட்டு உள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதரத்திற்கே கஷ்டப்படும் நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சங்கத்தில் மொத்தம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு ரூ.3.75 கோடி தேவைப்படுகிறது என்பதால் நடிகர், நடிகைகள் அனைவரும் நிதி வழங்க வேண்டும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

- Advertisement -

இதனை அறிந்த பல நடிகர்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இதுவரை பெப்சி அமைப்புக்கு ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.நடிகர்களை பொறுத்த வரை சிவகார்த்திகேயன்-விஜயசேதுபதி சூர்யா ஆகியோர் தலா 10 லட்சமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சமும், அஜித் 1.25 கோடியும் அளித்திருந்தனர். மேலும் ராகவா லாரன்ஸ் அதிகபட்சமாக 3 கோடி ரூபாயை அளித்திருந்தார்.

வீடியோவில் 9 நிமிடத்தில் பார்க்கவும்

ஆனால், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரும் அதிகம் சம்பளம் வாங்கும் விஜய் கொரோனா நிவாரண நிதியாக எதுவும் கொடுக்கவில்லை. இதனால் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் ஒருவழியாக விஜய் கொரோனா நிதி கொடுக்க முடிவெடுத்து விட்டார் என்று பிரபல யூடுயூப் விமர்சர்கர்களான வலைப்பேச்சு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுளளது.

-விளம்பரம்-

ஆனால் மற்ற நடிகர்களை போல நேரடியாக பணமோ அல்லது பொருளோ வழங்காமல் வித்தியாசமாக கூப்பன் முறையில் உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து திரைப்பட சங்க நிர்வாகிகளிடம் விஜய் பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் அளிக்கும் கூப்பன்களை வைத்து தொழிலாளிகள் தங்களுக்கு தேவையான வீட்டுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement