நான் எதாவது சொல்ல, உங்கள் தளபதி பின்னால் ஒளிந்து கொள்வீர்கள். திரௌபதி இயக்குனர் போட்ட ட்வீட்.

0
22606
mohan
- Advertisement -

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்துள்ளார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த படம் பெரிய அளவு பட்ஜெட் இல்லை என்றாலும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை முந்தியது. இந்த படம் குடும்ப பெண்களின் ஆதரவையும் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பு குறித்து சமீபத்தில் தெரிவித்துள்ளார் மோகன். அதில், , திரெளபதி என கடவுளின் பெயரை வைத்ததால்தான் இப்படத்தின் மீது வன்மம் காட்டப்படுவதாக தெரிவித்துள்ளார் தான் இயக்கும் அடுத்த படத்துக்கும் கடவுள் பெயரிலேயே தலைப்பு வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ள அவர்,   விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறி இருந்தார்

- Advertisement -

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் அறிவிப்பை சில காலம் தள்ளி வைத்து உள்ளேன் என்றுபதிவிட்டிருந்தார். இந்த டீவீடக்கு ட்விட்டர்வாசி ஒருவர், Postponed (ஒத்திவைப்பது) என்பது அஜீத்துக்கும் அவர் ரசிகர்களுக்கும் புதுசா ?என்று கிண்டலாக கமன்ட் செய்து இருந்தார். அந்த ட்விட்டர்வாசி பெயர் மாஸ்டர் என்று குறிப்பிட்டிருந்தால். அந்த ரசிகர், விஜய் ரசிகர் என்று புரிந்துகொண்டு இதற்கு பதிலடி கொடுத்த மோகன், அறிவித்த தேதியில் மாஸ்டர் படம் பார்த்தீங்க போல என்று பதில் கூறியுள்ளார்.

இதில் இருந்து ஆரம்பித்தது மோகனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையிலான ட்விட்டர் மோதல். இந்த டீவீட்டிற்கு பின்னர் மோகனை பல்வேறு விஜய் ரசிகர்களும் டார்கெட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மோகன் சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் கட்சி செயலாளர் ஒருவரை தாக்கியதால் இடம் மாற்றம் செய்யப்பட்டார் என்ற ஒரு செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், அந்த பதிவில் சம்மந்தபட்ட அந்த போலீஸ் அதிகாரியை நீக்க வேண்டும் என்றும், அவர் மீது FIR போட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த பதிவிற்கு, என்றும் தளபதி என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து ஒருவர், சார், அந்த திரௌபதி டேக் மறந்துடீங்க என்று கிண்டலடிக்க, அதற்கு மோகன், நான் எதாவது சொல்ல, உங்கள் தளபதி பின்னால் ஒளிந்து கொள்வீர்கள்.. வேலைய பாருங்க தம்பி என்று பதில் கொடுத்துள்ளார். இதனால் மீண்டும் விஜய் ரசிங்கர்கள் மோகனிடம் ட்விட்டரில் மல்லுக்கட்டி வருகின்றனர்.

Advertisement