கருப்பு சட்டைய போட்டு டயலாக் பேச வச்சீங்களே. கறுப்பர் கூட்ட விவகாரத்தில் ரஜினி சொன்ன கருத்து. ரஞ்சித்தை மறைமுகமாக கலாய்த்த மோகன்.

0
902
mohan
- Advertisement -

முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை கொச்சையாக பேசி அவதூறாக வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்ட விவகாரம் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். பெரும் சர்ச்சையை இந்த விகாரத்தில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.

கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மத்தது வேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும், ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா. என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : நயந்தாராவிற்கு ரசிகர் இருக்குன்னா, எனக்கும் தான் இருக்காங்க – வனிதா அதிரடி பேட்டி.

- Advertisement -

இந்த நிலையில் திரௌபதி இயக்குனர் மோகன், ரஜினியின் இந்த கருத்து குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், எந்த சூப்பர் ஸ்டார திரையில கருப்பு சட்டைய போட்டுவிட்டு கடவுளுக்கு எதிரா டயலாக் பேச வச்சிங்களோ அதே சூப்பர் ஸ்டார் தான் இன்று கருப்பர் கூட்டத்திற்கு எதிராக பேசி நிஜ வாழ்வில் உங்களை கதற விடுறார். வாழ்க்கை ஒரு வட்டம். அதிலும் இந்த ஆண்டவன் அட்டம் இருக்கே. அது கட்டம் கட்டிய வட்டம் என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் மோகன் குறிப்பிட்டுள்ளது இயக்குனர் ரஞ்சித்தை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனை பல்வேறு ட்விட்டர் வாசிகளும்கமன்ட் செய்து வருகின்றனர்.மேலும், ரஞ்சிததிற்கும் மோகனுக்கு இருக்கும் பனிப்போர் பற்றி அனைவரும் அறிந்த ஒரு விசயம் தான். ரஞ்சித் தான் ரஜினியை வைத்து கபாலி, காலா என்று இரன்டு படங்களில் கருப்பு சட்டையை போட்டுவிட்டு வசனம் பேச வைத்தவர் என்பதும் அறிந்த ஒரு விஷயம் தான்.

-விளம்பரம்-
Advertisement