சமீப காலமாகவே தமிழ் சினிமா உலகில் ஜாதிகளை மையமாக வைத்து பல இயக்குனர்கள் படம் எடுத்து வைக்கிறார்கள். இது சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுப்பினாலும் அதில் சில படங்கள் வெற்றியையும் பெற்று வருகின்றன. வெற்றிமாறன், மாரிசெல்வராஜ், ரஞ்சித் போன்ற பல இயக்குனர்கள் ஜாதியை மையமாக வைத்து படங்களை இயக்கி இருந்தார்கள், இந்த படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த இயக்குனர்களுக்கு சினிமா உலகில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் இதே போல் ஜாதியை மையமாக வைத்து வெளிவந்த படம் தான் திரௌபதி . இந்த படத்தை மோகன் ஜியால் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, சீலா, கருணாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஆனால், இந்த படம் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

Advertisement

இதை தொடர்ந்து சமீபத்தில் கூட ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்கி இருந்தார். என்னதான் இவரை ஒரு தரப்பினர் சமூக அக்கறை கொண்ட படங்களை எடுக்கிறார் என்று பாராட்டினாலும் மற்றொரு அமைப்பினர் இவர் குறிப்பிட்ட ஜாதிகளை குறிப்பிட்டே படம் எடுக்கிறார் என்று குற்றம் சாட்டியும் தான் வருகின்றனர்.

இப்படி நிலையில் சமீபத்தில் பிரபல யூடுயூப் சேனல் ஒன்று மோகனை பேட்டி கண்டது. அந்த பேட்டியில் ஜெய் பீம் சர்ச்சைகள் குறித்து மோகனிடம் கேட்கப்பட்டது. மேலும், மோகன் குறித்தும் அவரது படங்கள் குறித்தும் அவருக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் குறித்தும் கிடுக்கிபுடி கேள்விகளை கேட்டார் அந்த ஆங்கர்.

Advertisement

அதிலும் குறிப்பாக மோகன் இயக்கும் எல்லா படங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நபர் அனைத்து காட்சிகளையும் பார்த்துவிட்டு படம் அருமையாக இருப்பதாக விமர்சனம் செய்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், அந்த நபர் மோகனின் குழுவில் இருப்பவர் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த மோகன் அவர் தன்னுடைய தீவிர ரசிகராக கூட இருக்கலாம் என்று கூறியிருந்தார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்தப் பேட்டியில் மோகனை கேள்வி கேட்ட தொகுப்பாளரை கேலி செய்து வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோகன் ‘யாருப்பா அந்த எடிட்டர்’ என்று கேட்டிருக்கிறார்.

Advertisement

Advertisement