அவரை வன்னியர் சமூகமாக அடையாளம் காட்டியிருப்பது உள்நோக்க அரசியல் – சர்ச்சையை கிளப்பிய மோகன்.

0
920
mohan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக சூர்யா ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் சமீபகாலமாக சூர்யா அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து உள்ளார். அந்த வகையில் தற்போது சூர்யா அவர்கள் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில்நடித்து இருந்தார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்துள்ளது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்த படத்தில் எஸ் ஐ குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் கொடூர வில்லனாக நடித்த இயக்குனர் தமிழின் தத்ரூபமான நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவரது கதாபாத்திரம் படத்தில் தவறாக சித்திரிக்கப்பட்டு இருப்பதாக திரௌபதி பட இயக்குனர் மோகன் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், பாதிக்கப்பட்ட ராஜாக்கன்னு என்ற குரவர் சமூகத்தை சார்ந்த மனிதருக்காக களத்தில் போராடி திருமணம் கூட செய்யாமல் உடன் நின்றவர் வன்னியர் இனத்தை சேர்ந்தவர்.. மேலும் உடன் நின்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஐயா வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். ஆனால், திரைப்படத்தில் கொலை செய்த அந்தோனிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாக மாற்றி வன்னியர் சமூக அடையாளம் கொண்டு காட்டியதில் உள்ளது உள்நோக்க அரசியல்..

-விளம்பரம்-

ஜெய்பீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவர்கள் அதை பின்பற்றவும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், சார் நான் 15 வருசமா Cpim கட்சியில இருக்கேன் நீங்க சொன்ன பிறகுதான் தோழர் பாலகிருஷ்ணன் சாதி எனக்கு தெரியும், உங்க சாதிய அரசியலுக்காக கம்யூனிச தோழர்களை சாதிய வட்டத்திற்குள் அடைக்க முயலாதீர்கள்.மற்றபடி உள்நோக்கத்தோடு உண்மையை யார் திரித்து கூறினாலும் அது தவறுதான்.நீங்கள் உட்பட என்று கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த மோகன், அவர் சாதியை சொல்வது என் நோக்கம் இல்ல சகோ.. உண்மையை சொல்றேன்னு இப்படி வன்மத்தை கொட்டி வச்சதால இதை பேச வேண்டிய நிர்பந்தம்.. அந்தோனிசாமி ஏன் குருமூர்த்தியாக குறிப்பிட்ட சமூகத்தவராக காட்ட வேண்டும்.. பதில் இருக்கா… உண்மையை திரையில் பேச திராணி வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement