தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் மோகன். இவர் இயக்கிய முதன் முதல் படம் பழைய வண்ணாரப்பேட்டை. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இவர் திரௌபதி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பல நிஜ விஷயங்களை கூறி உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக ஷாலினியின் அண்ணன், அஜித்தின் மைத்துனன் ரிச்சர்ட் நடித்து உள்ளார். இந்த படம் இன்று திரையரங்கிற்கு வெளிவந்து உள்ளது. இந்த படத்தில் ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உட்பட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

தேவராஜ் எடிட் வேலை செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த ஜூபின் தான் இசையமைக்கிறார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி உள்ளது. பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியுள்ளார்கள். சமூகத்தில் நடக்கும் நாடக காதல் பெயரில் நிலவும் சம்பவங்களை பற்றி வெளிப்படையாக காட்டி உள்ளது. சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி.

Advertisement

இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் நடித்து உள்ளார். இந்த படத்தில் இவர் சிலம்பம் கலைஞர். இந்த படம் குறித்து மக்கள் கலவையான விமர்சனங்கள் தெரிவித்து வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் தல அஜித் குறித்து குறிப்பிட்டு உள்ளார். அதில் அவர் கூறியது, நல்ல படத்திற்கு புரோமோஷன் தேவையில்லை,விளம்பரம் தேவையில்லை என்று அஜித் கூறுவார்.

அதே போல் திரௌபதி படத்தின் ப்ரோமோஷன் என நாங்கள் எதுவும் செய்யவில்லை. இந்த படத்தை நாங்கள் குறைந்த அளவு செலவில் தான் எடுத்தோம். மேலும், தல அஜித் சொன்னது போலவே எங்களுடைய படத்திற்கும் நடந்து விட்டது என கூறி உள்ளார். இயக்குனர் மோகன் கூறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படம் வெளிவருவதற்கு முன்னர் அஜித்தையும் இயக்குனர் மோகனை வைத்தும் பல கருத்துக்கள் வந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement