தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக சூர்யா ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் சமீபகாலமாக சூர்யா அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து உள்ளார். அந்த வகையில் தற்போது சூர்யா அவர்கள் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில்நடித்து இருந்தார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.
பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்துள்ளது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் இந்த படத்தில் எஸ் ஐ குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் கொடூர வில்லனாக நடித்த இயக்குனர் தமிழின் தத்ரூபமான நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவரது கதாபாத்திரம் படத்தில் தவறாக சித்திரிக்கப்பட்டு இருப்பதாக திரௌபதி பட இயக்குனர் மோகன் குற்றம் சாட்டி இருக்கிறார்.
மேலும், இவர் வரும் ஒரு குறிப்பிட்ட காட்சியில் அவரது பின்னால் இருக்கும் காலெண்டர் ஒன்றில் தீச்சட்டி புகைப்படம் இடம்பெற்று உள்ளது வன்னியர் சமுதாயத்தை குறிக்கும் ஒரு குறியீடாக இருக்கிறது என்று வன்னியர் தரப்பினர் குற்றம்சாட்டி இருக்கின்றனர். மேலும், அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து சூசகமாக பதிவிட்டுள்ள செய்தி நெறியாளர் ரங்கராஜ் பாண்டே, உண்மைச் சம்பவம் என்பது, உள்ளதை உள்ளபடி சொல்வது. பெயர்களையும் அடையாளங்களையும் (மட்டும்) மாற்றினால், அதன் நோக்கம் சந்தேகிக்கப்படுவது இயல்பே,சத்யமேவஜெயதே வாய்மையே வெல்லும் என்று பதிவிட்டுள்ளார். ரங்கராஜ் பாண்டேவின் இந்த டீவீட்டை திரௌபதி இயக்குனர் மோகனும் லைக் செய்துள்ளார்.