பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி இருந்தது.

மேலும், பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியும். சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி.ஆனால், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக காண்பித்து விட்டார் மோகன் என்று ஒரு சர்ச்சையும் வெடித்தது.
இதையும் பாருங்க : ஸ்டேஜ்ல் நான் பேசுனத தப்பா புரிஞ்சிகிட்டான் - வடிவேலுடன் ஏற்பட்ட சிறு பிரச்சனை குறித்து பேசிய விவேக். இது தான் பிரச்சனைக்கான வீடியோ.
இந்த படத்தில் திரௌபதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷீலா ஏற்கனவே 'டூ லேட்' என்ற படத்தில் நடித்துள்ளார். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆன யோகி பாபு நடித்த 'மாண்டேலே' படத்திலும் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த படத்தில் ஒரு போஸ்ட் வுமனாக நடித்து இருந்தார் ஷீலா. இந்த இரண்டு படங்களிலுமே மிகவும் கிராமத்தில் லுக்கில் நடித்து இருந்தார்.

மேலும், பலர் இவருக்கும் திருமணம் நடக்கவில்லை என்று தான் நினைதது வந்தனர். ஆனால், இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் செய்துகொண்டுள்ளார். அதிலும் கடலுக்கு நடுவே மாலை மாற்றி படு வித்யாசமாக திருமணம் செய்துகொண்டுள்ளார் ஷீலா. இப்படி ஒரு நிலையில் இவரது மாடர்ன் உடை புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.





