ஸ்டேஜ்ல் நான் பேசுனத தப்பா புரிஞ்சிகிட்டான் – வடிவேலுடன் ஏற்பட்ட சிறு பிரச்சனை குறித்து பேசிய விவேக். இது தான் பிரச்சனைக்கான வீடியோ.

0
1695
vivek
- Advertisement -

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் நேற்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார்.இப்படி ஒரு மாரடைப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வீடியோவில் 6 : 20 நிமிடத்தில் பார்க்கவும்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 4.35 மணி அளவில் காலமானார். விவேக்கின் மறைவிற்கு பல்வேரு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். அதே போல விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் நேரில் கலந்துகொள்ள முடியாமல் போன நடிகர் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனது நண்பர் விவேக்கின் இழப்பை எண்ணி கண்ணீர் மல்க அழுதார் வடிவேலு.

இதையும் பாருங்க : பல இளம் பெண்களுக்கு தொல்லை – டேனி பற்றி ஆதரங்களை வெளியிட்ட நபர். சின்மயி போட்ட ட்வீட்.

- Advertisement -

வடிவேலு மற்றும் விவேக் இருவரும் பல்வேறு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சினிமாவை தாண்டி இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விவேக் மற்றும் வடிவேலுவுக்கு நடந்த சின்ன பிரச்சனை குறித்து பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் விவேக். அந்த பேட்டியில் தொகுப்பாளினி வடிவேலும், நீங்களும் ரெண்டு பேரும் சேர்ந்து படங்கள் பண்ணி இருக்கும் போது அவரால் ஏதாவது உங்களுக்கு பிரச்சனை வந்திருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு விவேக் அவர்கள் கூறியது, அந்த மாதிரி எல்லாம் வராது. காரணம் என்னவென்றால் என்னுடைய பாணி வேற, அவருடைய பாணி வேற. அவர் கிராமத்து பாணியில் போவார், நான் வந்து படித்த இளைஞனின் பார்வையில் பண்ணுவேன்.
விவேக் குறிப்பிட்ட அந்த வீடியோ இதுதான்

அதனால் எங்கள் இரண்டு பேருக்கும் அந்த மாதிரி எந்த ஒரு பிரச்சினையும் வந்தது கிடையாது. ஒரே ஒரு முறை மட்டும் மேடையில் நான் சொன்னதை கொஞ்சம் தப்பா புரிந்துக் கொண்ட மாதிரி தெரிந்தது. அதற்கு என்னடா நல்லா பேசுறியே, என்ன நைட்டே உட்கார்ந்து ஸ்கிரிப்ட் எழுதி வாங்கி விட்டாயா என்று நான் கேட்டேன். அதற்கு அவன் அட போடா என் மனசுல தோன்னதா அப்படியே சொன்னேன் என்றார். அது மட்டும் தான் மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது.

-விளம்பரம்-

எப்பவுமே எங்களுடைய நட்பு இருக்கும். நான் நிறைய பேட்டிகளில் அவரைப் பற்றி சொல்லி இருக்கிறேன். ஆனால், அவர் எந்த பேட்டியிலும் என்னைப் பற்றி பேசியது கிடையாது. அது அவருடைய விருப்பம் என்று நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் அவர் மேல் இருக்கிற அன்பும், மதிப்பும் என்றும் குறையாது என்று கூறினார்.

Advertisement