கொள்கை தெளிவில்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும் – கமலுக்கு மோகன் கொடுத்த டிப். (ஆண்டவருக்கே அட்வைஸா)

0
612
mohan

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன்,கட்சியில் இருந்து விலகியதையடுத்து அந்த கட்சியில் இருந்து பல்வேறு நபர்கள் வெளியேறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்ட சென்னை தமிழச்சி என்ற புனைப்பெயர் கொண்ட பத்மப்ரியாவும் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விள்குவதாக அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்டவர் பத்மப்ரியா.

இதே தொகுதியில் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார்.ஆனால் அதைக் காட்டிலும் சென்னை தமிழச்சி பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டதால் ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது. இதனால் மதுரவாயல் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி 31 ஆயிரத்து 231 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இதையும் பாருங்க : கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் ரஜினி பட டைட்டில் – சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டையின் ஆன்டி இந்தியன் மோஷன் போஸ்டர்.

- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்ட பத்மபிரியா 33,401 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி இந்த தொகுதியில் நான்காம் இடத்தை பிடித்தது. இப்படி ஒரு நிலையில் பத்மபிரியா நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த அவர், அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கமலுக்கு அரசியல் செட் ஆகவில்லை என்று திரௌபதி பட இயக்குனர் மோகன் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கமலஹாசன் சார். சினிமாவில் நீங்க ஒரு வரலாறு. அதையே தொடருங்கள். கொள்கை தெளிவில்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும். அரசியலை தூக்கி எறிந்து விட்டு கலை பயணத்தை தொடருங்கள்.. சென்னையில் ஒரு மாபெரும் படப்பிடிப்பு தளம் இல்லை.. இதற்காக போரடுங்கள்.. இதை செய்தாலே வரலாறு பேசும் உங்களை என்று கூறியுள்ளார்.

Advertisement