என்னதான் நடிப்புத் திறமை ஒரு நடிகரிடம் கோலோச்சி இருந்தாலும் பல மொழிகளில் சென்று சேர வேண்டும்மானால் அந்த மாநிலம் அல்லது வட்டார்த்திற்கு ஏற்ப குரல் வளமையும், பேச்சுத் தோணியும் வேண்டும். அப்படி சரியாக இல்லை எனில் கண்டிப்பாக அவர்களுக்கு அந்தந்த மொழிகள் பேசும் நடிகர்கள் டப்பிங் செய்து கொடுப்பார்கள். அது போல தான் தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்களுக்கு பிரபலமானவர்கள் டப்பிங் செய்து கொடுத்திருக்கிறனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழைத் தவிர தெலுங்கில் வெளியாகும் அவர் படங்களுக்கு வாய்ஸ் கொடுப்பது சிங்கர் மனோ
உலகநாயகன் கமல் பல மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் ஆனாலும் இவரது தெலுங்குபடங்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுப்பது ஜாம்பவான் பாடகர் SP.பாலசுப்ரமணியம் தான்.
கர்நாடகாவில் இருந்து வந்தவரான பிரபுதேவா ஆர்மபகாலத்தில் சரியாக தமிழ் பேச வராது, அப்போது இவருக்கு வாய்ஸ் கொடுத்தது நம் சியான் விக்ரம் தான்.

Advertisement

நடிகர் அப்பாஸுக்கும் வாய்ஸ் கொடுத்தது சியான் விக்ரம் தான்.

ஆடுகளம் படத்தில் மதுரைத் தமிழில் கிஷோருக்கு வாய்ஸ் கொடுத்தது இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரகனி.

தெலுங்கில் இருந்து வந்தவரான அஜித்திற்கு ஆரம்ப காலத்தில் வாய்ஸ் கொடுத்தது சியான் விக்ரம்.

தெகுங்கு காமெடி நடிகர் பிரம்பாந்தம் தமிழ் படங்களுக்கு வாய்ஸ் கொடுப்பவர் எம்.எஸ்.பாஸ்கர்

நேபாள அழகி மனிஷா கொய்ராலாவிற்கு ஆரம்பத்தில் தமிழ் படங்களில் வாய்ஸ் கொடுத்தது மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவி ரோகினி, இவர் பொதுவாக ஐஸ்வர்யா ராய், ஜோதிகா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

ஹாலிவுட் மற்றும் சீன, ஜப்பான் மொழிப்பட நடிகர் ஜாக்கி ஜானுக்கு தமிழ் படங்கள் மற்றும் ஜாக்கி ஜான் கார்டுனுக்கு வாய்ஸ் கொடுத்தவர் முரளி குமார்.

மலையாளத்தில் இருந்து வந்தவரான நயன்தாரா ஆரம்பத்தில் தமிழ் பேச டப்பிங் கொடுத்தவர் தீபா வெங்கட்.

முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அம்மன் படத்தில் டப்பிங் வாய்ஸ் கொடுத்தது சரிதா.

தெலுங்கு முன்னணி நடிகை இலியானாவிற்கு தமிழில் டப்பிங் பேசியவர் ஸ்வாதி ரெட்டி, இவருக்கு நண்பன் படத்தில் டப்பிங் பேசியது ஆண்ட்ரியா

சூரியா மற்றும் கார்த்தியின் படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கும் தெகுங்கில் வெளியிடப்படும் இவர்களது படங்களுக்கு சூர்யாவிற்கு காரர்த்தியும், காரர்த்திக்கு சூர்யாவும் தெலுங்கில் டப்பிங் பேசிக்கொள்வார்கள்

உலகநாயகன் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு தமிழ் சில படங்களில் டப்பிங் பேசியது மலையாள நடிகை மடோன்னா செபாஸ்டியன்

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென்னுக்கு டப்பிங் பேசியது தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தனுஷ்.

Advertisement
Advertisement