இந்தியில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களின் வழக்கை வரலாற்றை மையப்படுத்தி பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. சமீபத்தில் தோனி, சச்சின் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் வாழ்க்கை வரலாறும் படமாக்கபடவுள்ளது. இந்தியில் ‘தேரே பின்லேடன், த ஷாக்கீன்ஸ், பர்மனு’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அபிஷேக் சர்மா என்பவர் இயக்கவுள்ள கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு ‘ஸோயா பேக்டர்’ என்று தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், கோலியின் கதாபாத்திரத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவிருக்கிறார்.
தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் துல்கர் சால்மன், அதன் பின்னர் ‘ஓ காதல் கண்மணி ‘ என்ற படத்திலும் நடித்திருந்தார்.சமீபத்தில் இந்தியில் வெளியான ‘கர்வான் ‘ என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகிலும் கால் பதித்தார் துல்கர்.
தற்போது இந்தியில் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இந்தி நடிகை சோனம் கபூர் நடிக்கிறார்.மேலும், இந்த படத்தில் நடிகை சோனம் கபூர் , விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று எதிர்பார்க்கபடுகிறது.