42 ஆண்டுகளுக்குப் பின் ‘அவள் அப்படித்தான்’ ரீமேக்-ரஜினி மற்றும் கமல் கேரக்டரில் யார் தெரியுமா?

0
1482
aval
- Advertisement -

1978- ஆம் ஆண்டு இயக்குனர் ருத்ரய்யா இயக்கத்தில் வெளியான படம் அவள் அப்படித்தான். அந்தக் காலகட்டத்திலேயே பெண்ணியல் வாதம் பேசிய படம். இந்த படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ் சினிமா ரசிகர்கள் மசாலா படங்கள் மீதான ஈர்ப்பில் இருந்ததால் இந்த படத்திற்க்கு அப்போது பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காமல் போனது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை தற்போது பாணா காத்தாடி இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய இருப்பதாக திட்டமிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீப்ரியா நடித்த மஞ்சு என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு, துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள ரசிகர்களுக்கு தகுந்தாற்போல கதையில் மாற்றங்கள் செய்து படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பத்ரி வெங்கடேஷ் பேட்டியில் கூறியது, ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து முடித்து முதல் முறையாக படம் இயக்கியது ருத்ரய்யா தான். நானும் ஃபிலிம் இன்ஸ்டியூட் மூலம் சினிமாவுக்கு வந்ததால் அந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமானது. அதோடு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது. இந்த படத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என தெரியவில்லை. ருத்ரய்யா தற்போது உயிருடன் இல்லை. அவரது மகள் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்

ஆனால், அவருக்கும் இது பற்றி ஒன்றும் தெரியவில்லை. மேலும், நான் படத்தில் உள்ள காட்சிகளை அப்படியே ரீமேக் செய்ய விரும்பவில்லை. இந்த படம் எடுக்க எந்த தடையும் இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். எனது அனைத்து படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருப்பார். ஆனால், இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க விரும்புகிறேன் என்று கூறி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement