மலையாள சினிமாவில் துல்கர் சல்மானின் படங்களுக்கு தடை, கொந்தளிப்பில் திரையரங்க உரிமையாளர்கள்- பின்னணி என்ன?

0
528
- Advertisement -

நடிகர் துல்கர் சல்மானுக்கு மலையாள சினிமாவின் தியேட்டர் அதிபர்கள் சங்க கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாள மொழியின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். இவர் மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் 2012 ஆம் ஆண்டு ‘செகண்ட் ஷோ’ என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து “தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும்” என பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் வாயை மூடி பேசவும் என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நடிகர் துல்கர் சல்மான் பெரிய அளவு பிரபலமானார்.

-விளம்பரம்-

அதை தொடர்ந்து இவர் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஹே சினாமிகா போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இப்படி இவர் தமிழில் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது துல்கர் நடிப்பில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் சல்யூட். இந்த படத்தை வே பாரர் பிலிம்ஸ்- துல்கர் சல்மான் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்தில் துல்கர் சல்மான், மனோஜ் கே ஜெயன், டயானா பெண்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

துல்கர் சல்மானின் சல்யூட் படம்:

துல்கர் சல்மான் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள சல்யூட் படத்தை திரையரங்குகளுக்கு தருவதாக சொல்லி ஒப்பந்தமும் செய்து கொண்டு கடைசியில் அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு ஓடிடி தளத்தில் அந்தப்படத்தை துல்கர் சல்மான் திரையிட்டு விட்டதால் மலையாள சினிமாவின் தியேட்டர் அதிபர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், துல்கரின் சல்யூட் திரைப்படம் ஏற்கனவே ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

துல்கர் சல்மானின் சல்யூட் படத்திற்கு வந்த தடைகள்:

ஆனால், அப்போது கேரளாவில் ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் இந்த படத்தின் திரையிடலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்து இருந்தார்கள். ஆனால், அப்போது துல்கர் சல்மானின் அலுவலக ஊழியர்கள் பலரும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் பாதிக்கப்பட்டுள்ளதால் படம் வெளியாக முடியவில்லை. பின் மார்ச் 31ம் தேதிக்குள் ஒடிடியில் வெளியாக வேண்டும் என்று சோனி லீவ் தளத்துடன் முன்பே ஒப்பந்தம் செய்திருந்தார்கள். இதனால் வேறு வழியில்லாமல் சல்யூட் படத்தை ஒடிடியில் வெளியிட்டார்கள்.

-விளம்பரம்-

துல்கர் சல்மான் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த பேட்டி:

மேலும், துல்கர் சல்மானின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films ஏற்கெனவே தயாரித்திருந்த ‘குரூப்’, மற்றும் ‘உபாசரபூர்வம் குண்டா ஜெயன்’ ஆகிய படங்களும் ஓடிடியில் தான் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து கேரள மாநில தியேட்டர் உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவரான விஜயகுமார் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஓடிடினால் தான் தாங்கள் வாழ்வதாக நட்சத்திர நடிகர்கள் நினைத்தால் அவர்கள் அந்த வழியிலேயே போகட்டும். நாங்கள் தடை போடவில்லை. எங்களுக்கு அனைத்து நடிகர்களும் ஒன்று தான். மோகன்லால், பிரித்திவிராஜ் உள்ளிட்ட சிலரின் படங்களும் ஒடிடியில் வெளியாகியுள்ளன.

கோபத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் கூறியது:

அப்போது தியேட்டர்கள் மூடப்பட்டு, பாதி டிக்கெட்டுகளுக்கு மட்டுமே அனுமதியிருந்ததால் அவர்கள் ஓடிடிக்குக் கொடுத்தார்கள். இப்போதும் இதையே தொடர்ந்தால் நிச்சயம் மோகன்லாலின் படங்களையும் எதிர்காலத்தில் நாங்கள் எங்களது தியேட்டர்களில் திரையிட மாட்டோம். இது அவர்களுக்கான தடையில்லை. வாழ்வாதாரத்திற்காக நாங்கள் போராடி வரும் சூழலில் எங்களை காப்பாற்றி கொள்ள நாங்கள் எடுக்கும் தற்சார்பு நடவடிக்கை தான் இது என்று கொந்தளிப்புடன் பேசி இருக்கிறார்கள். இது மோகன்லாலுக்கு மட்டுமல்ல துல்கர் சல்மானுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement