சனாதனம் குறித்து தான் பேசியதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மனம் புண்பட்டிருக்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன் மேல் இரண்டாம் இடம் பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் இந்தியவின் முதல் இடம் பிடித்த குகேஷ் ஆகியோருக்கு தனியார் பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் சாகர் பாபு மற்றும் சென்னை மிகப்பெரிய அதிபர் அது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் கூறியது:

எனது தலைக்கு 10 லட்சம் என்றார்கள் தற்போது ஒரு கோடி என்று கூறுகிறார்கள். எனக்கு பெரிதாக கடவுள் நம்பிக்கை கிடையாது ஆனால் அதில் கூறுவது போல எங்கும் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பவன் அதுக்கு ஏற்ப பத்திரிக்கையாளர்கள் உங்களை நான் சந்திக்கின்றேன். ஒரு நாளைக்கு நானும் எத்தனை முறை தான் பேட்டி அளிப்பது. உங்களுடைய ஆர்வம் புரிகிறது சனாதனத்தில் இருப்பதிலும் ஒழிப்பதிலும்  நீங்களும் பணியாற்றி வருகிறீர்கள்.

Advertisement

அதற்கு என்னுடைய நன்றி. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதற்காக தன் மீது மான நஷ்ட வழக்கு போட்டார் என்பது எனக்கு தெரியவில்லை இது குறித்து நான் எங்களுடைய வழக்கறிஞர்களிடம் கேட்க உள்ளேன். நான் எதும் அவரைப் பற்றி தரக்குறைவாக பேசவில்லை. ஒருவேளை நான் சனாதனத்தை குறித்து பேசினால் அவரது மனம் புண்பட்டிருக்கும் அது பற்றி எனக்குத் தெரியவில்லை நான் வழக்கறிஞர்களிடம்  பேசப்போகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

எடப்படியின் வழக்கு:

கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சனாதனத்தில் ஒழிக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இது குறித்த செப்டம்பர் மாதம் 10 தேதி அன்று வெளியிட்ட அறிவிக்கையில்  சனாதானத்திற்கான அர்த்தத்தை எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டில் உள்ள அலமாரியில் தேடிக் கொண்டிருக்கிறார் என்றும் அவரை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் நீண்ட நாட்கள் ஆட்டு தாடியின் பின் ஒளிந்திருக்க முடியாது அந்த ஆடு காணாமல் போகும்போது உங்களுடன் நிலைமை என்னவாகும் என்று எடப்பாடி விமர்சித்தார். 

Advertisement

இந்த அறிக்கை தன்னுடைய பெயருக்கு கலங்கும்  விளைவிக்கும் வகையிலும் தன்னுடைய பெயருக்கு கலங்கும் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னைப் பற்றி அவதராக பேசியதற்கு அமைச்சர்களின் உதயநிதி ஸ்டாலின் எனக்கு ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் மானலாஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் அவர் தன்னைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.

Advertisement
Advertisement