‘மத்தவங்க மாதிரி பண்ண முடியாது’ – தன் சீரியல் இயக்குனர் மறைவுக்கு இதனால் தான் இரங்கல் தெரிவிக்கவில்லை – கேப்ரில்லா வெளியிட்ட வீடியோ.

0
682
Gabriella
- Advertisement -

ஈரமான ரோஜாவே 2 சீரியலின் இயக்குனர் திடீர் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு ஏன் இரங்கலை தெரிவிக்கவில்லை என்று கேப்ரில்லா விளக்கமளித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த காத்து கருப்பு, தாயுமானவன், கல்யாண முதல் காதல் வரை, மௌன ராகம் சீசன் 1, நாமிருவர் நமக்கிருவர், பாவம் கணேசன் போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களை இயக்கியவர் தாய் செல்வம். இவர் சின்ன திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளி திரையில் கூட எஸ் ஜே சூர்யா நடித்து வெளிவந்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்தையும் இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

தற்போது இவர் விஜய் டிவியில் டிஆர்பி யில் முன்னிலையில் வகுத்து வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலை இயக்கி வருகிறார். ஈரமான ரோஜாவே முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாய் செல்வம் திடீர் மரணம் அடைந்தார். இது விஜய் டிவி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

தாய் செல்வம் இறப்பிற்கு அவரது இயக்கத்தில் நடித்த முன்னாள் நடிகர், நடிகைகள் எல்லாம் கூட சமூக வலைதளத்தில் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். ஆனால், அவரது இயக்கத்தில் நடித்து வரும் கேப்ரில்லா அவரது இறப்பிற்கு சமூக வலைதளத்தில் கூட இரங்கலை தெரிவிக்கவில்லை. இதனால் நெட்டிசன்கள் பலரும் கேப்ரில்லாவை விமர்சித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து லைவ் ஒன்றில் கேப்ரில்லா விளக்கமளித்து இருக்கிறார். அதில் ‘நான் அவர் இறந்து விட்டார் என்று பதிவை போடும்போது எனக்கு மிகவும் தப்பாக இருந்தது.

அதனால் அதை நான் பண்ணவில்லை. நான் அவரது இரங்கல் பதிவை நீக்கி விட்டேன். என்னுடைய இரங்கலை நான் தனிப்பட்ட முறையில் தான் தெரிவித்தேன். அதை சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால், அது நிறைய பேருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இது மிகவும் சென்சிடிவ்வான விஷயம் என்பதால் அதைப்பற்றி எதுவும் பேச வேண்டாம். அதை ஒரு பிரச்சினையாக மாற்றி விட வேண்டாம்.

-விளம்பரம்-

என்னுடைய இரங்கலை நான் அவர்கள் குடும்பத்திற்கு தனியாக சொல்லி விடுவேன். அதை சமூக வலைதளத்தில் அனைவரும் செய்கிறார்கள் என்று நானும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரது இரங்கல் செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்வது எனக்கு தவறாக தோன்றியது. அதனால்தான் நான் செய்யவில்லை. இதை ஒரு பதிலாக கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

இருந்தாலும் அவருக்காக இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்று தான் தோன்றியது. இது கண்டிப்பாக மிகவும் துன்பமான செய்தி தான். எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.அதை சொல்வதற்கு தான் நான் வந்தேன். கண்டிப்பாக நாங்கள் அவரை மிஸ் செய்வோம். இது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு, இந்தக் கடினமான நேரத்தில் மற்ற விஷயங்களை பெரிதுபடுத்த வேண்டாம். எங்கள் நிலையை புரிந்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்

Advertisement