விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சமீபத்தில் முடிவடைந்த சீரியலில் ஒன்று தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் தேன்மொழி என்கிற தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அர்ச்சனா. அதுமட்டும் இல்லாமல் இவர் நடன நிகழ்ச்சியின் மூலம் தான் சின்ன திரையில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை அர்ச்சனா சென்னையை சேர்ந்தவர். சென்னையில் கல்லூரி படித்து கொண்டிருக்கும் போதே இவர் நடனம் கற்றுக் கொண்டார்.
பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். பிறகு இவர் நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் விஜய் டிவியின் பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். பின் நடிகை அர்ச்சனா அவர்கள் ஈரமான ரோஜாவே சீரியல் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம்.
மேலும், தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதால் அடிக்கடி தன்னுடைய வீடியோக்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது இவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது .
நடிகை அர்ச்சனா அவர்கள் இதழும் இதழும் இணையட்டும் என்ற வெப்சீரிஸில் நடிக்கிறார். இந்த வெப்சீரிஸ் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கிறது. மேலும், இந்த வெப்சீரிஸ் ஏழு பாகங்களாக வெளி வர உள்ளதாக தகவல் வெளியாகியது.