சினிமா ரேஞ்சுக்கு செல்லும் சீரியலின் ரொமான்ஸ் காட்சி. வைரலாகும் வீடியோ.

0
13681
- Advertisement -

சமீப காலமாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போதெல்லாம் மக்கள் வெள்ளித்திரை நோக்கி செல்வதை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சிறியவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை என அனைவரும் சீரியல் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு தற்போது சீரியல்கள் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய டிஆர்பிக்காக புதுப்புது வித்தியாசத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

இப்போதெல்லாம் சீரியல்கள் சினிமா படம் போல் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. லவ், ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி என எல்லாவற்றிலும் சினிமாவைப் போலவே சீரியலிலும் காண்பித்து வருகிறார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் சீரியலுக்கு மவுஸ் கூடிவிட்டது. அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் மிக பிரபலமான சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 1991 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் டைட்டில் தான் இந்த சீரியலுக்கு வைத்து உள்ளார்கள். இந்த சீரியலில் பவித்ரா, திரவியம் ஜோடி மலர்,வெற்றி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த ஜோடிகளுக்காகவே சீரியல் பார்க்கிற ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த சீரியலை கதிரவன் இயக்குகிறார். தன்னுடைய அண்ணன் ஒரு பெண்ணை காதலிக்கிறார். பின் அந்த பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள போகிறார். திருமணம் செய்யும் சமயத்தில் தன் அண்ணனுக்கு விபத்து ஏற்பட்டு இறந்து விடுகிறார். பெற்றோர்களின் வற்புறுதல் படி தன் அண்ணனுக்கு பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். பின் இவர்கள் இருவருக்கிடையே ஏற்படுகின்ற புரிதல் நட்பாக மாறி பின் காதலாக மாறுவது தான் கதை. இந்நிலையில் இந்த சீரியலில் இன்று ஒளிபரப்பாகும் எபிசொட் ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் பயங்கர ரீச்சை பிடித்துள்ளது.

அது என்னவென்றால், இன்றைய எபிசொட் லவ் ரொமான்ஸ் காட்சி. இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் மலருக்கும், வெற்றிக்கும் முதலிரவு நடக்கும் காட்சி. அதற்கு ஒரு சூப்பர் லவ் ஹிட் பாடலை போட்டு உள்ளார்கள். அந்த பாடல் நிஜ வாழ்க்கையில் ஜோடியான ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பாடிய இரவாக நீ பாடல் தான். இந்த பாடல் இது என்ன மயக்கம் படத்தில் இடம் பெற்றது. தற்போது இந்த பாடல் சீரியலில் இடம் பெற்றதால் ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளார்கள். இன்று ஒளிபரப்பான எபிசோடு பார்ப்பதற்கு செம்ம தூள் என்று கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement