ஈசன் படத்தில் வந்த இந்த பையன ஞாபகம் இருக்கா – வேற லெவல் Transformation. பாத்தா அசந்திடுவீங்க.

0
2306
eesan

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில படங்களில் நடிக்கும் கதாபாத்திரத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டர்கள். அந்த வகையில் ஈசன் படத்தில் வந்த இந்த பையனை நிச்சயம் மறந்திருக்க வாய்ப்பில்லை. 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஈசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சசிகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சமுத்திரக்கனி, வைபவ், ஏ எல் அழகப்பன், அபிநயா போன்ற பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து’ என்ற பாடல் அந்த சமயத்தில் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

வெறும் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்று இருந்தது. இந்த படத்தில் நடித்த அபிநயாவின் தம்பியாக வரும் ஒரு குட்டி பையன் தான் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்தான் தனது அக்காவை சீரழித்து கொன்ற நபர்களை மர்மமான முறையில் தொடர்ச்சியாக கொலை செய்வார். இவருடைய பெயர் தான் இந்த படத்தின் டைட்டிலே. இவரது உண்மையான பெயர் துஷ்யந்த் ஜெயபிரகாஷ்.

இதையும் பாருங்க : அச்சு அசலாக நெப்போலியன் போலவே இருக்கும் அவர் சகோதரரை பார்த்துள்ளீர்களா ? குடும்ப புகைப்படம் இதோ.

- Advertisement -

ஈசன் படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காணமுடியவில்லை இருப்பினும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த சரண் சக்திக்கு முன்பாக இவர்தான் அந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது அதேபோல கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வருணன் என்ற படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது இந்த படத்தின் போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டு இருந்தார்.

ஜெயவேல் முருகன் என்பவர் இயக்கத்தில் உருவான இந்த படத்தை கார்த்திக் ஸ்ரீதரன் என்பவர் தயாரித்திருந்தார். இந்தபடத்தில் துஷ்யந்த், ஹரிப்ரியா, தொகுப்பாளினி மகேஸ்வரி, பிக் பாஸ் புகழ் கேப்ரில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். கேங்ஸ்டர் படமாக அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. ஆனால், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படவில்லை. இப்படி ஒரு நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement