வித்தியாசமான முறையில் அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகரித்த ஊராட்சி மன்ற தலைவர். அப்படி என்ன செய்தார் தெரியுமா?

0
1052
- Advertisement -

பொதுவாக அரசு பள்ளியில் தரம் குறைவாக இருக்கும் காரணத்தினால் பெற்றோர்கள் தங்களுக்கு தனியார் பள்ளிகளை சேர்த்து வருகின்றார். இது குறித்து அரசின் பல்வேறு முயற்சிகளை செய்தும் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்த வகையில் திருவாரூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர்  அவர்களின் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால் அவர்களின் வீட்டு வரி குடிநீர் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். இது அப்பகுதியில் பெரும் பாராட்டை பெற்றது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 18 புதுக்கோடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் தான் திவ்யா இவர் ஒரு பிஇ பட்டதாரி.

-விளம்பரம்-

இவரது கணவன் கணேசன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளது. அங்கு இருந்த அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு சேர்க்கை குறைந்து வருவதை  கண்டார். தங்கள் ஊராட்சியில் உள்ள பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் கொண்டு வந்தார். சமீபத்தில் அங்கு ஒரு கிராம சபை கூட்டம் நடைபெற்றது அதில் உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் உங்களுக்கு வீட்டு  வீட்டு வரி விலக்கு மற்றும் குடிநீர் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அவர் கூறினார் இது ஆனாலும் மக்களை மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

- Advertisement -

இது குறித்து கூறிய ஊராட்சி மன்ற தலைவர்:

இது குறித்து திவ்யா கூறுகையில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக ஆசிரியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பல விதமான செயல்களில் ஈடுபட்டு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் எங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்கையானது தனியார் பள்ளிகூடம் அளவிற்கு உயர்ந்து வருகிறது. எங்கள் ஊரில் மொத்தம் 400 வீடுகள் உள்ளது. இருப்பினும் அங்குள்ள அரசு பள்ளியின் சேர்க்கையானது குறைந்து கொண்டே  வந்தது இதற்கான காரணம் என்னவென்றால் அங்கு எங்க ஊராட்சிக்கு அருகிலே ஒரு தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தான் வருகிறது.

இது தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். நம்மூரில் உள்ள அரசு பள்ளி சேர்க்கை உயர்த்துவதற்காக ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என் கணவர் என்னிடம் கூறினார். ஊராட்சி பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு செலவே இல்லாம சிறப்பான கல்வி வழங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் இருந்தது. இதை எடுத்து கல்வி ஆண்டு தொடக்கத்தின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் சேர்ந்து வீடு வீடாக சென்ற அரசுப் பள்ளியில் உள்ள நன்மைகளைப் பற்றி துண்டு பிரச்சாரமாக செய்து வந்தோம்.

-விளம்பரம்-

மேலும் 100 நாள் வேலைகள் செய்யும் இடங்களிலும் சென்று அங்குள்ளவர்களிடம் அரசு பள்ளி பற்றி எடுத்துக் கூறி வந்தோம். அப்போதுதான் நம் ஊரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களை  சேர்ப்பவர்களுக்கு வீட்டு வரி விலக்கு மற்றும் குடிநீர் வாரி விலக்கு என்று நாங்கள் அறிவித்தோம். இந்த இரண்டு வரையும் சேர்த்து வீட்டிற்கு வருடத்திற்கு 600 ரூபாய் வரை வருகிறது. இந்த அறிவிப்பு அறிவிப்பு நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த ஜூன் கல்வி ஆண்டிலேயே நம் எங்களுடைய பள்ளியில் புதிதாக 15 மாணவர்கள் சேர்ந்தனர். தனியார் பள்ளியில் படித்திருந்த மாணவர்களையும் இங்கு அரசு பள்ளியில் வந்து சேர்த்தனர்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் மாணவர் சேர்க்கை அதிகமாகும் என்று நம்புகிறேன். அவ்வாறு சேர்க்கும் மாணவர்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்றம் கட்டுவதற்கு அரசு விதியில் வழிமுறை இல்லாத காரணத்தினால் அந்த பதினாறு மாணவர்களுடைய வரிகளையும் நான் என் சொந்த பணத்தில் கட்டுகிறேன். கடந்த சுதந்திர தின விழாவில் இருந்து நான்  செயல்முறைப்படுத்தினேன். வருங்காலங்களில் இருந்து அரசியல் பல வரிகளை கழித்தால் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகமாகும். மேலும் திருட்டை தடுப்பதற்காக என் சொந்த பணத்தில் ஊராட்சி முழுவதும் 50 ஆயிரம் ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

Advertisement