பிரபல சீரியல் நடிகை ஹரிப்ரியா புதிய தொழிலை தொடங்கி இருக்கும் செய்திதான் இப்போது இணையத்தில் பரவி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்தவர் நடிகை ஹரிப்ரியா. சொல்லப்போனால், இவரை ‘நந்தினி’ என்றால் தான் எல்லாருக்கும் தெரியும். அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் ஹரிப்ரியா.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் நுழைந்தவர். இதைத்தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லக்ஷ்மி வந்தாச்சு என்ற தொடரில் நடித்தார். பின் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பிரியமானவள் என்ற தொடரில் இசை என்ற கதாபாத்திரத்தில் ஹரிப்ரியா நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் என்று சொல்லலாம்.
எதிர்நீச்சல் சீரியல்:
அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் தொடங்கப்பட்டு சின்னத்திரை டிஆர்பி யில் மாஸ் செய்த ஒரு தொடர் எதிர்நீச்சல். நான்கு பெண்களை மயமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த தொடரில் ஹரிப்ரியாவும் ஒருவராக நடித்திருந்தார்.மேலும், வில்லனாக மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார். பின் அவர் பிறப்பிற்கு பிறகு வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த அந்த சீரியல் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.
புதிய தொழில் தொடங்கிய ஹரிப்ரியா:
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் பேராதரவை பெற்றவர்தான் ஹரிப்ரியா . தற்போது அந்த சீரியல் முடிந்த நிலையில், புதிய தொழில் ஒன்று தொடங்கியுள்ளார். அதாவது பரதநாட்டிய டான்ஸரான ஹரிப்ரியா, புதிதாக நடனப்பள்ளி ஒன்று தொடங்கி அதற்கு ‘காலி கல்பா’ எனப் பெயரிட்டுள்ளார். அந்தப் பள்ளியில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் நடன வகுப்புகள் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக ஒரு பதிவு போட்ட ஹரிப்ரியாவுக்கு பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
ஹரிப்ரியா திருமணம்:
நடிகை ஹரிப்பிரியா அவர்கள் 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பின் திடீரென்று விவாகரத்து செய்வதாக இவர்கள் எவருமே தெரிவித்திருந்தார்கள். இவர்கள் இருவரின் விவாகரத்துக்கு காரணம் மனக்கசப்பு தான் என்று கூறப்படுகிறது. பிரிவிற்குப் பிறகு ஹரிப்ரியா தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரிப்பிரியா நடித்த சீரியல்கள்:
நடிகை ஹரிப்ரியாவின் முழு பெயர் ஹரிப்ரியா இசை. 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர், கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு லட்சுமி வந்தாச்சு, கல்யாணம் முதல் காதல் வரை, பிரியமானவள், சரவணன் மீனாட்சி, செந்தூரப்பூவே, தாலாட்டு, எதிர்நீச்சல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும், தற்போது இவர் ‘இன்னிசையே’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது பிற்படுத்தக்கது.