கொரோனா பிரச்சனை இன்னும் தீராத நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகள் அனுமதிக்கு மருத்துவர் ஒரு தனது ஆதங்கத்தையும் எதிர்பையும் தெரிவித்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது.ஆனால், மாஸ்டர் போன்ற பெரிய திரைப்படத்தை Ott யில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதாலும் ரசிகர்களும் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது இருப்பினும் கொரோனா பிரச்சினை காரணமாக திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது .

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய்கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து திரையரங்குகளில் தற்போது 50 சதவீதமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதை, 100 சதவீதமாக மாற்ற வேண்டி அவர் கோரிக்கை வைத்தாகவும் தகவல்கள் வெளியானது. அதே போல நடிகர் சிம்புவும் இதே கோரிக்கையை முன்வைத்து இருந்த நிலையில் திரையரங்குகல் 100% பார்வையாளர்களுடன் இயங்க அராசானை வெளியாகி இருந்தது.இந்த அறிவிப்பால் திரையுலகினர் மட்டுமல்லாது மாஸ்டர் படத்தை எதிர்நோக்கி காத்திருந்த விஜய் ரசிகர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.

இதையும் பாருங்க : லீக்கான Ticket To Finale 3ஆம் சுற்று முடிவு – முன்னிலையில் யார் இருக்கா பாருங்க.

Advertisement

மாஸ்டர், ஈஸ்வரன் படத்துக்காக தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி குறித்து டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் உருக்கமான பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அவர் பதிவிட்டுள்ள முகநூல் பதிவில், அன்புள்ள விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக இருக்கிறார்கள். சுகாதாரத் துறை ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.இந்த நோய் பரவல் தடுக்க நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும் தெரியவில்லை.

மருத்துவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்

எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.பான்டமிக் இன்னும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் இறக்கிறார்கள். தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி. இல்லை கொலை, சட்டம் செய்பவர்களோ, ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை. உயிருக்கு பணத்தை வியாபாரம் செய்கிறார்கள்.

Advertisement

நாம் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த பான்டமிக்கில் இருந்து வெற்றிகரமான மீண்டு வர முயற்சிக்கலாமா? மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே, அது இன்னும் முழுதாக அணையவில்லை. நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் அரவிந்த் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement